வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலையிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். வேலூர் அடுத்த ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பாலமுருகன், வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை தலைமையில் செய்து இருந்தனர்.
காட்பாடி அடுத்த 66 புத்தூர் முருகன் கோயிலில் அசரீ்ர் மலையில் தைப்பூச விழா சிறப்பாக நடந்தது.
வண்டறந்தாங்கல் அடுத்த சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ஜிரவேல் முருகன் கோயிலில் இந்து அன்னையர் சார்பில் 300 பால் குடம் எடுத்து பூஜை நடைபெற்றது. இதில் வேலூர் கோட்ட இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷங்களை எழுப்பி காவடிகள் எடுத்து தரிசனம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுடன் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment