கே.வி.குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மேல்மாயில் சாலையில்,
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
அரசு மருத்துவமனை போன்ற அரசு சார்ந்த அலுவலகங்கள்
அமைந்துள்ளதால் அச்சாலையில்
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் போக்குவரத்து அதிகம் உள்ளது. ஆகவே அச்சாலையை அகலப்படுத்தி தருமாறு கே.வி.குப்பம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு
கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்று
நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் பாலாஜி மேற்பார்வையில்
பிப்.24-அன்று மேல்மாயில் சாலையிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரையில், சாலையோரமுள்ள செடிகளை அகற்றியதுடன், குடியிருப்பு பகுதியுள்ள சாலை ஆக்கிரமிப்புகளை ஜெசிபி மூலம் அகற்றி மேடு,பள்ளங்களை சமன் செய்யும் விதத்தில், மண் எடுத்து சாலை அகலம் செய்யப்பட்டது. இந்நிலையில், பிப்.25-அன்று அப்பகுதி வாழ் மக்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு வந்து ஊராட்சி மன்ற தலைவர். புஷ்பலதா சரவணனை சந்தித்து, "எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் வசதியில்லாமல் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே தாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்"- என்ற
கோரிக்கை மனுவை தலைவரிடம் வழங்கினர். அவர்களின் அந்த
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தலைவர் அதற்கான நடவடிக்கையை விரைந்து
எடுப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment