Friday, 28 February 2025

மனம் முடித்துக் கொள்வதாக இளம் பெண்ணிடம் ஆசை காண்பித்து பழகிய விவகாரம்.. காலம் தாழ்த்திய போலீசார்: விரக்தியில் காதலி தற்கொலை!

வேலூரில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 5 வருடங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர். மனவிரக்தியில் காதலி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா.

வேலூர் மாவட்டம், நஞ்சிகொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (வயது 31) என்பவரும் பக்கத்து கிராமமான வேடைக்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி (வயது 28) என்ற பெண்ணும் 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் 15- நாட்களுக்கு முன்பு அவரது அக்கா மகளை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அன்பரசி 27ம் தேதி மதியம் அவர்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

5- வருடங்களாக காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், புகாரின் பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸார் காலம் தாமதம் செய்தது என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...