பறிமுதல் செய்த அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை திரும்ப ஒப்படைக்க, ரூ.5, ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், வின்சென்ட் செல்வகுமார் என்பவர், 'கால் டாக்சி' ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் ஜன., 5ம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் சென்றுள்ளார் கால் டாக்ஸி ஓட்டுநர். அப்போது, பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிய நிலையில். இதனால், அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர், வின்சென்ட் செல்வகுமாரிடம், அவரின் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் இது குறித்து சில தினங்கள் கழித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த உதவி காவல் ஆய்வாளர் லட்சுமண பெருமாள், தலைமைக் காவலர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் கால் டாக்ஸி ஓட்டுனர் வின்சென் செல்வக்குமார் தனது டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக் கேட்டுள்ளார். இதை திரும்ப ஒப்படைக்க, ரூ.5, ஆயிரம் கையூட்டு கேட்டுள்ளனர். அந்தப் போலீஸ்க்காரர்கள், லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் இரு போலீஸ்காரரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளார் கால் டாக்ஸி ஓட்டுநர் பின்னர். இதுகுறித்து, வின்சென்ட் செல்வகுமார், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுத் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவையே 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புகார்தாரரான கால் டாக்ஸி ஓட்டுனர் வின்சென்ட் செல்வக்குமாரிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்களிடம் கொடுக்கும்படி போலீசார் கூறிய நிலையில், இதனையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், டூட்டியிலிருந்த உதவி காவல் ஆய்வாளர் லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் வின்சென்ட் செல்வகுமாரிடம் லஞ்சம் வாங்கியபோது, இருவரும் கையும் களவுமாக விஜிலென்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment