அத்துடன் என் மேல் எந்த புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதை பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் பாபுவிடம் நீ ஒன்றும் பணம் எதுவும் தர வேண்டாம். அந்த பணத்தை என்னிடம் கொடுத்து விடு நான் பார்த்துக் கொள்கிறேன். இவனுக்கு யார் ஆதரவாக வருகிறார்கள் என்று பார்த்துவிடலாம் என்று கொக்கரித்துள்ளார்.
அத்துடன் 20 நாட்கள் கழிந்த நிலையிலும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு அநீதி பாதிக்கப்பட்டவருக்கு நடந்த போதும் தனிப்பிரிவு போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இது குறித்த தகவல் ஏதும் அனுப்பாமல் மழுப்பிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் விரும்பிய இடமெல்லாம் சென்று மாமூல் வசூல் செய்து வருகிறார் என்ற தகவலும் ஒரு புறம் உலா வருவது குறிப்பிடத்தக்கது. காவல்துறை என்றால் என்ன என்பதே தெரியாமல் பலர் இதுபோன்று பணியாற்றி வருவது அந்த காவல்துறையின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் இப்படி என்றால் மனோகரன் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி கண்டு கொள்வதே இல்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் காட்பாடி காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது? கட்டப்பஞ்சாயத்து நடக்கிறதா? என்பதை சீர்தூக்கி பார்த்தால் அவ்வளவு வழக்குகளும் எந்த நிலையில் உள்ளது, எவ்வாறு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரும் இதில் நேரம் செலவழித்து அறிந்து கொள்ள முன்வரவில்லை என்பதால் இவர்கள் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேலூர் சரக டிஐஜி தேவராணி காட்பாடி காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவராவது முனைப்பு காட்டுவாரா? அல்லது காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் போன்ற காவல் துறை உயர் அதிகாரிகள் ஏதாவது உத்தரவிட்டால் தான் இது போன்ற ஏழைகளுக்கு நீதி வழங்குவார்களா? என்பது புரியாத புதிராக சென்று கொண்டுள்ளது. பணம் இருப்பவர்களுக்கு நியாயம், நீதி, நேர்மை என்று மாறிவிட்ட காலமாக உருவாகியுள்ளது. காட்பாடி காவல் நிலையத்தி்ல் பணம் இல்லை என்றால் அவனை ஒரு மனிதனாக கூட மதிப்பது கிடையாது. குறிப்பாக இந்த காவல் நிலையத்தில் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம் உண்மை நிலைமை. இப்படியே சென்று கொண்டிருந்தால் பொதுமக்கள் பொங்கி எழுந்து திடீர் போர்க்கொடி தூக்கவும் ஆயத்தமாகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்காக காவல்துறையா? அல்லது காவல்துறைக்காக பொதுமக்களா? என்பதற்கு விடை தெரியாமல் காட்பாடி பகுதி மக்கள் அல்லாடி கொண்டுள்ளனர் என்பது தான் உண்மையிலும் உண்மை. காட்பாடி காவல் நிலையத்தின் மீது காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது போன்ற ஏழைகளுக்கு நீதி கிடைக்குமா? நியாயம் கிடைக்குமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகம் தான் ஏற்படுமா? என்பதையும் போக போக நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment