Wednesday, 26 February 2025

பேரணாம்பட்டில் அதிமுக சார்பில் ஜெ.,வின் 77 வது பிறந்தநாள் விழா!

வேலூர் புறநகர் மாவட்டம் , ஊராட்சி ஒன்றியம், ஏரிகுத்தி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட அ.தி.மு.க.பிரதிநிதியுமான ஜே. இன்பரசன் தலைமை தாங்கினார்.

 பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான பொகளூர். டி.பிரபாகரன் விழா ஏற்பாடுகளை செய்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து 300க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ். ஜெயந்தி சேகர், ஹரிதரன், ராமகிருஷ்ணன், மகேந்திரன், பூபதி, கதிரேசன், மணி, தமிழரசன், இலையன், பிரேம் தாஸ், ஆரோன், துரை, சந்திரகாசி, ஸ்டீபன், சங்கர், ஜகா.குமரேசன், ஜியா நாயுடு, அக்தர் பாஷா, சீனிவாசன், சுரேஷ், தரணி உள்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...