Monday, 10 February 2025

கிறிஸ்துவ திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்.. கிறிஸ்துவ திருமண சட்டம்-1872 கூறுவது என்ன!?

திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நமது நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தொடர்புடைய வெவ்வேறு சட்டங்கள் உள்ளது. அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம்-1872, (இது இந்து, இஸ்லாமியர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து) இந்து, ஜெயின், பவுத்த, சிக்கிய மதத்தினருக்கு இந்து திருமண சட்டம்-1955 பொருந்தும். அதேபோல் பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தனி தனியாக திருமண சட்டங்கள் உள்ளது. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு தனியாக திருமண சட்டம் பல ஆண்டுகளுக்கு முன் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம்-1872 உள்ளது. அதேபோல் அவர்கள் எதிர்எடசூழ்நிலையில் பிரியும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்திய கிறிஸ்துவ விவாகரத்து சட்டம்-1869 வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இஸ்லாமிய திருமணம் சமூகத்தின் அவசியம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவ மதத்தில் திருமணம் என்பது வேதாகமத்தின் அடிப்படையில் புனிதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர் என்ற வார்த்தைக்கு கிறிஸ்துவின் வழியை பின்பற்றி நடக்கும் நபர் மற்றும் அதே மதத்தை பின்பற்றும் வம்சத்தினர் என்று அர்த்தமாகும்.

சட்டபூர்வமான திருமணத்திற்கு பின் பற்ற வேண்டிய விதிமுறைகள்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் கண்டிப்பாக ஒருவர் கிறிஸ்துவராக இருக்க வேண்டும். அவர்களின் திருமணம் கீழே குறிப்பிட்டுள்ள (காலம் 5ல் குறிப்பிட்டுள்ளபடி) கிறிஸ்துவ மத்திற்கு உட்பட்ட பிற வழிபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தகைய திருமணம் சட்டப்படி செல்லாத பூஜ்ஜிய திருமணமாக கருதப்படும் ( திருமண சட்டம் 4வது பத்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது).

திருமணம் கீழ் காணும் விதிமுறைகள்படி தான் நடக்க வேண்டும்.

திருச்சபை ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். கிறிஸ்துவ கோட்பாட்டின் படி ஞானஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். திருச்சபையின் தலைமை போதகர், பங்குதந்தை, ஆயர் உள்பட அதிகாரம் படைத்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறை (Rules), மதவிதிமுறை (Rites), வழிபாடு
(Ceremony), பாரம்பரம் (Custom) ஆகியவைக்கு ஏற்ற வகையில் திருமணம் நடக்க வேண்டும். அல்லது

திருமணம் செய்து வைக்கும் போதகர் (Minister of Religion) அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கிறிஸ்துவ திருமண சட்டத்தின் படி நியமனம் செய்துள்ள திருமண பதிவாளர் (Marriage Registar) அல்லது அவருக்கு இணையான அதிகாரி முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.

இந்திய கிறிஸ்துவர்கள் திருமணம் தொடர்பாக திருமண உறுதி சான்றிதழ் (Marriage Certificate) கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசின் மூலம் பெற்றுள்ளவர் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும்.

திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் எந்த இடத்தில், எந்த சமயத்தில் திருமணம் செய்யப்படும் என்பதை குறிப்பிட வேண்டும் (திருமணம் காலை 6 மணி முதல் மாலை 7 மணிக்குள்) மட்டுமே நடக்க வேண்டும். மேலும் திருமணம் திருச்சபையில் நடப்பது நல்லது. இருப்பினும் சில எதிர்பாராத சூழ்நிலையில் திருமண மண்டபங்களில் நடத்தலாம். அங்கும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட போதகர்கள் மூலம் மட்டுமே நடக்க வேண்டும்.

திருச்சபையின் தலைமை போதகர் (பிஷப்), பங்குதந்தை (பாதர்), ஆயர் அல்லது Minister of Religion மூலம் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி கிறிஸ்துவ திருமண சட்டம் பிரிவு 5 (1), (2) மற்றும் (3)ல் குறிப்பிட்டுள்ளபடி திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் திருச்சபையின் தலைமை போதகர் அல்லது அவரால் திருமணம் செய்துவைக்க அதிகாரம் வழங்கப்பட்ட போதகர் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே சட்டப்படி அங்கிகரிக்கப்பட்ட திருமணமாக ஏற்றுகொள்ளப்படும். இத்தகைய திருமணம் செய்து வைக்கும் போதகர்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் திருமணம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன் தங்கள் திருச்சபை போதகரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதில் தான் திருமணம் செய்து கொள்ளும் தேதி, மணமுடிக்கும் பெண்களின் பெயர், முகவரி, பெற்றோர், பிறந்த தேதி உள்பட முழு விவரங்கள் கொடுக்க வேண்டும். அதை பெற்றுகொள்ளும் போதகர்கள், நகல் எடுத்து திருச்சபையின் தகவல் பலகையில் வெளியிட்டு, இத்திருமணத்திற்கு நியாயப்படி ஏதாவது எதிர்ப்பு இருக்குமானால் கைப்பட கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். திருமணம் நடக்கும் நாள் வரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் மண முடிக்கும் தம்பதியர்களின் உறவினர்கள் இருவரை சாட்சியாக வைத்து சம்மந்தப்பட்ட திருச்சபை போதகர் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...