அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை மந்திரியாக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021-ஆம் ஆண்டில் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழ்நாடு பால்வளத்துறை முன்னாள் மந்திரி கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியிருந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றம் வழங்கிய பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இத்தனை காலம் அதிமுக தலைவர்கள் மீதான வழக்குகளை டெல்லி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது திடீரென சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளார். பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். உங்களை கழற்றிவிட அதிமுகவில் ரெடியாகி இருக்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான சிலர் அவரிடம் கூறியிருக்கிறார்களாம்.
ஏற்கனவே இதே வழக்கில்தான் தமிழ்நாடு அரசு சார்பாக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். இப்போது சிபிஐ உங்களை குறி வைத்து உள்ளது. இதனால் வழக்கில் பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் எச்சரித்து உள்ளார்களாம் .
இத்தனை காலம் டெல்லி இந்த வழக்கை கண்டுகொள்ளவில்லை. இப்போது சிபிஐ இதில் வழக்கு பதிவு செய்திருப்பது அதிமுக மீதான டெல்லியின் நெருக்கடியோ என்று எண்ண தோன்றுகிறது.
ஏற்கனவே அதிமுகவின் இரட்டை இலைக்கு சிக்கல் ஏற்பட்டுயுள்ளது. அதிமுகவில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் ஒன்றாக சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை.
தமிழ் திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரத்திலுள்ள நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழக கட்சியுடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம் எளிதாக முடிய வேண்டிய விஷயம். முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகியுள்ளது.
சின்னம் வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி வையுங்கள் என்று பாஜக அதிமுகவிற்கு நெருக்கடி தர தொடங்கியுள்ளதோ என்ற விவாதமும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக மாஜிக்கள் மீது டில்லி சிபிஐ மூலம் குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை மந்திரியாக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆனால் ராஜேந்திர பாலாஜி முன்னாள் மந்திரி என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே இந்த வழக்கில் நியாயம் இப்போது வரை கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment