திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்ந்த அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்து போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை தொடர்ந்து
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ,மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் ரோகிணி தேவி, மாநகராட்சி மேயர் சுஜாதா, கணியம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி சேர்மன் பவானி சசிகுமார், டாக்டர்கள், செவிலியர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஒன்றிய நிர்வாகிகள், கழக தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment