ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் விஜிலென்ஸ் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் துறை ரீதியான நடவடிக்கையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆர்.எஸ். மங்கலம், வட்டாட்சியர் அலுவலகத்துக்குட்பட்ட குமிழேந்தலைச் சேர்ந்த விவசாயி தனது தந்தை பெயரிலுள்ள நிலத்திற்கான பட்டா மாறுதல் கேட்டு பகவதிமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் பார்த்திபன்(வயது 28), விஏஓவை அணுகியுள்ளார். அப்போது பட்டா மாற்றத்திற்கு ரூ.50ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
முதற்கட்டமாக ரூ.37ஆயிரம் கொடுக்குமாறும், பணி முடிந்த பின் மீதித் தொகையை தருமாறு கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனுதாரர். இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனிடம் விவசாயி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் அறிவுரைப்படி கடந்த பிப்.,7ஆம் தேதியன்று புகார்தாரரான விவசாயிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.37ஆயிரத்தை கொடுத்து அனுப்ப அந்த லஞ்சம் பணத்தை பெற்றுக் கொண்டு சென்ற போது ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள இ-சேவை மையத்தில் கொடுக்குமாறு கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் கூறியுள்ளார். அதன்படி பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இ-சேவை மைய பொறுப்பாளர் அகமது ஜாப்ரின் அலி(வயது 25), என்பவரை கைது செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்க மூலகாரணமாகி கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் இ சேவை மைய பொறுப்பாளர் கைதான சம்பவத்தை அறிந்த பார்த்திபன் தலைமறைவாகி ஜாமினில் வந்துள்ளார்.
இந்நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபனை நேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் உத்தரவு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment