Monday, 17 February 2025

சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்”.. முன்னாள் சட்டத்துறை மந்திரி பேச்சு சூளீர்!

இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்." என அதிமுக முன்னாள் சட்டத்துறை முந்திரி சி.வி.சண்முகம் பேசி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தன்னை மாணவிகள் அப்பா என்று அழைப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். அண்மையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரிலான வீடியோ உரையாடலில் இதுகுறித்துப் பேசியிருந்தார்.

கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், "தலைவர்" என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், "முதல்வர்" என்றும் அழைக்கிறார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை "அப்பா" என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த "அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது!" எனக் கூறியுருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!.

இந்நிலையில், அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டத்துறை மந்திரியும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்தப் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

சி.வி.சண்முகம் பேசுகையில், "யாரை அப்பா என்று சொல்வார்கள்? மானம்கெட்ட தனமாக இருக்கிறது. பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம். தாய்மார்கள் எல்லோரையும் அம்மா என்று அழைப்பது வழக்கம். அது கலாச்சாரம்.

யாருக்கு யார் அப்பா? இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். நீ சொல்லக்கூடாது, மக்கள் சொல்லவேண்டும். சொன்னால் என் மீது வழக்குப் போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள். செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் சி.வி.சண்முகம்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...