நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு, எனக்கு ஏன் பாதுகாப்பு என தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்து ஆண்டுகளில் ஈழத்தில் என்ன நடந்ததோ அதே போல இங்கும் நடக்கும்.
பீகாரில் இருந்து ஒரு வியூக வகுப்பாளர் வேண்டும் என்றால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மூளை இல்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்பத்தூர் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்புக்கான தேவை உள்ளது. இந்த மக்களுக்காகத்தான் களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. காமராஜர் முதல்வராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர்.
மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய்போல புகழ்பெற்ற நடிகருக்கு சிரமம். என்னைப்போல நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை.
ஓட்டுப் பிச்சை எடுப்பதாக அண்ணாமலையின் விமர்சனத்துக்கு பதிலளித்தவர், குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இருக்கிறார்கள் இல்லையா?. ஈழத்தில் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்ட மக்களுக்கு அப்பா அம்மா இருக்கிறார்களா இல்லையா?. அந்த இலங்கை உங்களுக்கு எப்படி நட்பு நாடாக இருக்கிறது?. மணிப்பூரில் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை? பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கோவை குண்டு வெடிப்பை பற்றி பேசுபவர்கள் குஜராத்தை பற்றியும் பேச வேண்டும். ராஜீவ் காந்தி அனுப்பிய படை ஏற்படுத்திய பேரழிவையும் பேச வேண்டும். இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டதில்லை. ஓட்டு போடவில்லை என்றாலும் மக்களுக்காக இருப்பவன் நான். மக்களுக்காக நீ காசு கொடுக்கிறாய். எல்லாரும் காசு கொடுத்து ஓட்டை வாங்கி கொள்கிறீர்கள். ஏதாவது பேசினால் கைக்கூலி , கால் கூலி ஓட்டு பிச்சை என்று சொல்கின்றீர்கள்.
நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்களே வீட்டில் வந்து கொடுக்கிறார்களா இதெல்லாம் அநாகரிகமானது என்று அண்ணாமலைக்கு பதிலளித்தார். நான் சிறையில் இருக்கும் பொழுது இருந்து பாட்ஷாவை அப்பா என்று தான் அழைப்பேன். வாழ்கின்ற நாட்டில் மதத்தை பெரிதாத அழைத்தால், நாடு சுக்குசுக்காக சிதறுவதை தவிர்க்க முடியாது என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எதை நோக்கி எங்களை நகர்த்துகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன கேட்கின்றீர்கள்?. பிரபாகரன் படத்தில் அரசியல் ஆதாயம் இருக்கின்றது என்றால் நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எல்லா கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டு கொள்ளுங்கள். 200 வழக்கு வாங்கியிருக்கிறேன். சிறையில் இருந்திருக்கிறேன்.
பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துக் கொண்டு இருந்தாலும் எந்த நாட்டிலும் அனுமதிக்க மாட்டேன் என்கின்றனர்.
கள்ளச்சாராயம் தடுக்க முயன்ற இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் முன்விரோதம் என சொல்வதுதான் மிகவும் வலிக்கிறது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியாளர், கள்ளக்குறிச்சிக்கு மாவட்ட ஆட்சியாளர் என பலிகடா ஆக்கினர். தமிழ்நாடு அரசுக்கு இதற்கும் தொடர்பு கிடையாது. நாங்களே ஒவ்வொருவரும் வெடிகுண்டுதான். ஒரு வார்த்தை பேசினால் ஒரு வாரத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் அணு குண்டுதான்.
தமிழகத்துக்கு வரும் வட இந்தியர்கள் எந்த நடைமுறையினையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். ஈரோட்டில் வேலை பார்த்துக் கொண்டு தமிழர்களுக்கு வேலை கொடுக்காதீர்கள் என்று போராடினார்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் ஈழத்தில் என்ன நடந்ததோ அதே போல இங்கும் நடக்கும். "Y- பிரிவு பாதுகாப்பு கொடுத்தால் விஜய் பாஜகவிற்கு போய் விடுவார் என்பது சரியல்ல. பாஜகவிலேயே இருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு பாதுகாப்பு.
கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே வியூக வகுப்பாளர்கள் செய்கின்றனர். மக்கள் அரசியலை முன்னெடுப்பதில்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்கள் வெல்வது மட்டும் என்றால் அது வியாபாரம். மக்கள் அரசியல் எப்பொழுது வரும்?. தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர் வியூக வகுப்பாளராக இருக்கின்றார். ஆதவ் அர்ஜுனா என்ற வியூக பொறுப்பாளர் இருக்கிறார். இவர்களுக்கு இந்த மண்ணின் சிக்கல்கள் தெரியும்.
பீகாரில் இருந்து ஒருத்தர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை இருக்கிறதா இல்லையா?. தமிழகத்தில் யாருக்கும் மூளை எதுவும் இல்லை என்று நினைக்க மாட்டார்களா. திருப்பரங்குன்றம் பிரச்சனை, அத்திக்கடவு அவிநாசி பிரச்சனை, நொய்யல் பிரச்சனை இது எல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கின்ற வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா?
திமுகவிலேயே துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என். நேரு, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விட பிரசாந்த் கிஷோர் பெரிய ஆளா?. பீகாரில் போட்டியிட்டு ஒரு தொகுதி ஜெயிக்க முடிந்ததா பிரசாந் கிஷோரால். எல்லா கட்சியிலும் அறிஞர் பெருமக்கள் இருக்கின்றனர். இந்த நிலம் சார்ந்து பெரிய அறிஞர்கள் இருக்கின்றனர். வெளியில் இருந்து சுனில், பிரசாந்த கிஷோர் என்று ஒருத்தர் வந்து தான் வேலை பார்க்க வேண்டுமா?.
தமிழகத்தில் இருப்பவர்கள் மூளை மழுங்கி விட்டதாக நினைப்பார்கள். இதை தன்மான இழப்பாக பார்க்கிறேன். இங்கேயே பெரிய அறிஞர்கள் இருக்கின்றனர்.
ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோரே போதுமானது. ஜான் ஆரோக்கியசாமி எங்களுக்கு வேலை செய்யவில்லை. கட்சி கடந்து ஒரு உறவு இருந்தது. ஒப்பந்தம் போட்டு சம்பளம் கொடுத்து எல்லாம் வேலை செய்யவில்லை.
ஒரு சில முறை ஆலோசனை மட்டுமே சொல்லியிருக்கின்றார். அக்கறையின் காரணமாக சொல்வது தான். பாண்டே, ரவீந்திரன் துரைசாமி போன்றவர்களும்
சொல்லியிருக்கிறார்கள். வெவ்வேறு கட்சியில் இருப்பவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அதெல்லாம் சொன்னால் அந்த கட்சியில் பிரச்சனையாகிவிடும். திராவிட மாடல் ஆட்சிக்கு தலைவர் மு.க. ஸ்டாலின். ஆன்மீக ஆட்சிக்கு தலைவர் சேகர்பாபு. இது ஒரு கொடுமை.
திராவிட கட்டிடக்கலை, திராவிட நாடு என்று எல்லாம் பேசிப் பார்த்தார்கள். டிரம்ப் இதை செய்வார் என தெரியும். ஈழத்தில் இருந்து சென்றவர்களை சொந்த நாட்டு மக்களாக பிற நாடுகள் ஏற்றுக்கொள்கிறார்கள். வாழ வழி இல்லாமல் தேடிச் செல்லும் மக்களை அரவணைப்பது தான் சரியாக இருக்கும். ட்ரம்ப்பின் செயல் வல்லாதிக்க திமிராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment