Monday, 24 February 2025

வேலூர் காகிதப்பட்டறையில் அடுத்தடுத்துள்ள நான்கு மதுபான கடைகளை மூடக்கோரி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியாளரிடம் மனு!

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நான்கு அரசு மதுபான கடைகள் அருகருகே உள்ளன. இதனால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் அருகே வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளதால் அங்கு செல்லும் பக்தர்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது. இந்த நான்கு அரசு மதுபான கடைகள் அமைந்துள்ள சாலையானது மிக முக்கியமான சாலை ஆகும். எனவே இங்கு மது பிரியர்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

 குறிப்பாக இந்த பகுதியை கடக்கும் பெண்கள் மிகவும் பயத்துடனும், பதட்டத்துடனும் கடந்து செல்ல வேண்டி உள்ளது. ஆகவே இப்பகுதியில் அமைந்துள்ள நான்கு அரசு மதுபான கடைகளை அகற்றியும் அல்லது ஒரு கடையாக குறைப்பு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்த புகார் மனுவை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமியிடம் வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...