Wednesday, 12 February 2025

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களை மட்டுமே அதிகாரிகளை பார்க்க அனுமதிக்கும் காவலாளி ஏகாம்பரம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காவலாளியாக ஏகாம்பரம் என்பவர் பணியாற்றி வருகிறார். ஏகாம்பரம் அதிகாரிகளை பார்க்க வரும்போது 50 கோடுகள் 100 கோடுகள் என்று கேட்பதாகவும் , காசு கொடுப்பவர்களுக்கு மட்டும் அதிகாரிகளை சந்திக்க அனுமதிப்பதாகவும், காசு கொடுக்காதவர்களை இப்போது அதிகாரிகளை பார்க்க முடியாது நாளை வா, நாளை மறுநாள் வா, அடுத்த வாரம் வா என்று திருப்பி அனுப்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகளை சந்திக்க வரும்போது மக்களை நீ, வா, போ என்று ஒருமையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட  ஊராட்சிகளின் உதவி இயக்குனரும், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் ஆகியோர் காவலாளி ஏகாம்பரம் மீது தகுந்த துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க  வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அரசு உயர் அதிகாரிகளின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...