Monday, 24 February 2025

வேலூர் நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனமும் மருத்துவ ஒப்பந்தம்!

வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் இராணிப்பேட்டை பெல் நிறுவனமும் மருத்துவ ஒப்பந்தம் செய்து கொண்டது. இராணிப்பேட்டை பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அருண்மொழி தேவன் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

வேலூர் பகுதியில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை உலக அளவில் உயர்தர சிகிச்சை அளிப்பதில் முன்னணி மருத்துவமனையாக விளங்கி வருகிறது.  இம்மருத்துவமனை எல்.ஐ.சி. உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெறும் வகையில் அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இராணிப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத் துறை
நிறுவனமான பெல் எனப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அருண்மொழி தேவன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இதில் பெல் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எ.பாபு (மனித வளம் மற்றும் மருத்துவம்) பெல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அதுல் டிக்கா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...