வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நித்தம் நித்தம் கரன்சி மழையில் நனையும் தாசில்தார் தே.முரளிதரன், வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் பார்வை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கவனிக்குமா?
வேலூர் மாவட்டம். வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியில் இருப்பவர் சொந்த தாலுக்கா, தொரப்பாடியைச் சேர்ந்த தே. முரளிதரன் இவர் சொந்த தாலுகாவில் சத்துவாச்சாரி பகுதி கிராம நிர்வாக அலுவலராகவும், அதே பிற்காவில் வருவாய் ஆய்வாளராகவும், அதன்பின் அணைக்கட்டு , வேலூர் , காட்பாடி போன்ற வட்டாட்சியர் அலுவலகங்களில் மண்டலத் துணை தாசில்தாராகவும், வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பிரிவு தாசிலராகவும் , வேலூர் சொந்த தாலுகாவான வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். இவர் 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிசி) மூலம் குரூப் 4 இல் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக வேலூர் தாலுகாவுக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ-வாக பணிக்கு சேர்ந்தார் பிறகு அங்கு எவ்வாறெல்லாம் லஞ்சம் பழகலாம் என்று பல்வேறு முறைகேடுகள் செய்யலாம் என்று வித்தைகள் அனைத்தும் கற்றுக் கொண்ட இவர் அதன் பிறகு 2013இல் (டிஎன்பிசி) மூலம் குரூப் 2 வில் தேர்ச்சி பெற்று இளநிலை உதவியாளராக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பிரிவின் கீழ் பணியாற்றியுள்ளார். பின்னர் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட சத்துவாச்சாரி பிற்கா வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றிய போது. லஞ்சத்தை எவ்வாறெல்லாம் பயனாளிகளிடம் பெறலாம் என்று தேர்ச்சி அடைந்திருப்பார் போல் தெரிகிறது.
இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் கரன்சி கலெக்ஷனில் பேர் போனவராம். கரன்சி மழையில் நனையும் என்ற பெயரும் இவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களால் இவருக்குப் பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளதாக தன் துறை சார்ந்த வருவாய்த்துறையினிலே இருக்கும் நேர்மையான அதிகாரிகள் பரவலாகப் பேசப்படுகின்றனர். இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டலத்து துணை தாசில்தாராக பணியாற்றியபோது இவருக்கு கீழ் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டுவரும் முறைகேடான பத்திரங்களுக்கு பட்டா வழங்க பல ஆயிரம் ரூபாய் கை மாறியதாகவும் பின்னர் இவருக்கு காட்பாடி தாலுகாவில் ஓராண்டு பணி நிறைவு பெற்ற நிலையில் மாறுதலாகி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் போல் தெரிகிறது அப்பொழுது கூட சில கிராம நிர்வாக அதிகாரிகள் தங்கள் வாங்கிய லஞ்சத்திற்காக இவரிடம் நேரடியாக சென்று மேனுவல் பட்டா கையொப்பம் பெற்றதும் தற்போது தெரியவந்துள்ளது. எது எப்படியோ காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி பத்திரங்கள் பதிவாகியிருந்த நிலையில் போலி பத்திரப்பதிவு பதிந்த சார்பதிவாளர் பொறுப்பு சிவக்குமார் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தற்போது வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள் வரை தாசில்தார் முரளிதரனுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் ஏரிகளிலும் மணல் கனிமவளங்களை சுருட்டுப்பவர்களிடமிருந்து மாட்டு வண்டியில் மணல் கனிமவளங்களை கொள்ளையடிக்கும் சிலர் மூலமாக தாசில்தார் முரளிதரனுக்கு சேரவேண்டிய மாமுல் படுகச்சிதமாக வந்து சேர்ந்து விடுகிறது.
வேலூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் வட்டாரம். இவர் தாசில்தாராக வந்த பிறகு வழக்கத்தை விட லஞ்சத்தை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது, எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி உடனே நடக்கிறது தொலைபேசியிலேயே அனைத்து செட்டில் மட்டும் நடக்கிறதாம்.
வேலூர் தாசில்தார் தே. முரளிதரன் ஏழை எளியச் சாமானிய மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்?
மேலும் தாசில்தார் செய்யும் ஊழல்கள் தில்லுமுல்லு வேலைகள் பற்றிய தகவல் வெளியே கசிந்திட கூடாது என்பதற்காக வேலூரிலுள்ள ஒரு சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது மாதம் மாதம் இவர் லஞ்சமாக வாங்கும் கரன்சியை கொடுப்பதால் இவரை பொறுத்தவரை அரசியல்வாதிகளையை மிஞ்சி விடுவாராம்.
அதுமட்டுமின்றி இவர் செய்கின்ற வேலையை எம்.எல்.ஏ, மந்திரி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் வரை பாராட்டி வருவதாக இவரே தனக்கு தானே முத்திரை பதித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளிடம் கூறிவருகிறாராம்.
இதுகுறித்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நமது நிருபர்கள் தாசில்தார் முரளிதரனை பற்றி விசாரித்தபோது அனைத்து தரப்பினரும் அவர் நன்றாக பணியாற்றி வருகிறார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் முரளிதரனை பாராட்டி வருவதாக சொல்கிறாரே அது உண்மையா என்று கேட்டபோது எது லஞ்ச கையூட்டுப் பெறுவதில் அதிலும் ஐலேட் என்னவென்றால் தாசில்தாருடன் எப்போதும் பல்லி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும், சத்துவாச்சாரி வில்லேஜ் அசிஸ்டெண்டாக வேலை வந்ததும். இதனையடுத்து பத்து வருடங்களுக்கும் மேலாக வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலே OA-வாக பணிபுரியும் பத்துக்கும் மேற்பட்ட தாசில்தாரிடம் பணியாற்றிய அனுபவம் இந்த OA பணியிலுள்ள கோபிக்கு அனுபவம் உண்டாம். சில நேரங்களில் தாசில்தாரின் வாகன ஓட்டுனராகவும் கோபி செயல்படுவதாகவும் எந்த தாசில்தார் வந்தாலும் அவர்களை சார் என்று கூப்பிடாமல் அண்ணா அண்ணா என்று உறவுமுறை வைத்து கூப்பிட்டுக் கொண்டு தன் நினைத்த காரியங்களை சாதித்துக் கொண்டு ஒரே இடத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக அங்குள்ள மேஜைகளை தேய்த்துக் கொண்டு இருக்கும் வில்லேஜ் அசிஸ்டன்ட் கோபி என்கின்றனர் தாலுக்கா வட்டாரங்கள். மேலும் வில்லேஜ் அசிஸ்டன்ட் கோபி தலைமையில்
தான் லஞ்சத்தைப் படுக்கச்சிதமாக தாசில்தாருக்கு வாங்கிக் கொடுப்பதாக நமட்ட சிரிப்புடன் சொல்லுகின்றார். வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள். எனவே நமக்கு கிடைத்த தகவலை நாம் எழுதியுள்ளோம். இது குறித்து மாவட்ட ஆட்சியாளர் வே. இரா. சுப்புலட்சுமி, அவர்கள் விசாரணை குழு அமைத்து துரிதமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேலூர் பகுதி மக்களின் வேண்டுகோளாகும். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்!
No comments:
Post a Comment