தென்காசி நகராட்சியில் டெண்டர் வைப்புத் தொகையை கையாடல் செய்த இளநிலை உதவியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர் ராஜா முகமது.
கடந்த 2023 மார்ச் முதல் 2024 மார்ச் 31 வரை உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தணிக்கையில் டெண்டர் வைப்புத்தொகையில் ராஜாமுகமது ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 890 ரூபாய் கையாடல் செய்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது. பணத்தை கையாடல் செய்த அவரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராஜா முகமது இந்த மாத இறுதியில், அதாவது இன்னும் ஒரு வாரத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தாராம். அதற்குள் இப்படியொரு சம்பவத்தில் அதாவது மக்கள் வரிப்பணத்தில் சுமார் 21,48,890 ரூபாய் கபாலிகரம் செய்து தற்போது தணிக்கை அதிகாரிகளின் சோதனையில் சிக்கி கொண்டுள்ளார். நாளுக்கு நாள் அரசுத்துறையில் இதுபோன்ற கையாடல்களும், கைதுகளும் நடப்பது தமிழ்நாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment