Thursday, 20 February 2025

நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல பட்டாகத்தி ரவுடியைத் தட்டித் தூக்கிய கேளம்பாக்கம் போலீஸ்.. மீண்டும் மற்றொரு குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க மாவு கட்டு போடப்படுமா?



செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட படூர் கிராமத்தில் வசிக்கக்கூடிய பிரபல ரவுடி புருஷோத்தமன், இவன் சில நாட்களுக்கு முன்பு அரசு மலர்  பத்திரிகையில் திருப்போரூர் தாலுக்கா நிருபராக பணியாற்றி வரும் பர்வேஸ் மாலிக் என்பவருக்கு வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து  வெளியிட்டுள்ளார் பிரபல பட்டாகத்தி ரவுடி புருஷோத்தமன். திருப்போரூர் பகுதியில் கடந்த 15.02.2025 அன்று செய்தியைச் சேகரிப்பதற்காக நிருபர் பர்வேஸ் மாலிக் திருப்போரூர் அடுத்த படூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த பிரபல ரவுடி புருஷோத்தமன் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன். பயங்கர ஆயுதங்களோடு சென்று நிருபரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த கேளம்பாக்கம் காவல் நிலைய போலீசார் பிரபல ரவுடி புருஷோத்தமனை கைது செய்ததுடன் அவனுடைய கூட்டாளி தாஸ் என்பவனையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பெயரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும்  புருஷோத்தமனுடன் வந்த 10 பேர் கொண்ட அடியாட்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பத்திரிகை நிருபவரை தாக்கிய இச்சம்பவம் திருப்போரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...