கடந்த ஜனவரி மாதம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்ற தமிழ் கட்டுரை போட்டியில் ,தென்காசியைச் சார்ந்த மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் முதலிடமும் பெற்று மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளார். அவருக்கு தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்கு ரூபாய் 10,000 பரிசும், மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்கு ரூபாய் 15,000 பரிசுத்தொகையும் வழங்கி, பாராட்டி , கௌரவித்துள்ளது.
தமிழ் மொழி கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று, தென்காசி மாவட்டத்திற்கு பெருமைச் சேர்த்த, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஸ்ரீக்கும், அவரது பெற்றோருக்கும், மாணவியுடைய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டி கௌரவித்துள்ளார்.
அவருடைய ஆரம்பக் கல்வி, நகராட்சி நடுநிலைப்பள்ளி 13வது வார்டு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் வின்சென்ட் தலைமையில் அவருடைய வீட்டிற்குச் சென்று மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மாணவி யோக ஸ்ரீயையும், அவருடைய பெற்றோர் முப்படாதி, சுந்தரி முப்புடாதியையும் அழைத்து, பாராட்டி கௌரவித்தார். மாணவி யோகஸ்ரீ மென்மேலும் வளர்ந்து மேலும் பல சாதனை புரிய வேண்டும் என வாழ்த்தி, அனைத்து மருத்துவர்கள் சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் கீதா, மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி, மருத்துவர்கள் ராஜேஸ்வரி, பிரதிபா, தலைமை செவிலிய கண்காணிப்பாளர் பத்மாவதி, தலைமை மருந்தாக ராமச்சந்திரன் அலுவலக உதவியாளர் துர்கா,தீயணைப்புத்துறை காவலர் மாதவன், ஆசிரியை தமிழ்ச்செல்வி, மருத்துவமனை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment