Monday, 17 February 2025

திருச்சியில் மின் இணைப்பு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் சந்திரசேகர், தன் உதவியாளருடன் கைது!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கே.கே. நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், என்பவர் திருச்சி கே.கே. நகரில் தனது பெயரில் பேட்மிட்டன் கோர்ட் கட்டுவதற்கு மும்முனை மின்சாரம் வேண்டி அனைத்து ஆவணங்களையும் கொண்டு விண்ணப்பித்துள்ளார். பிறகு மின் இணைப்பு பெற கே.கே நகர் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் சந்திரசேகர்(வயது 58), என்பவரை அணுகியுள்ளார் அப்போது ரூபாய். 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உங்கள் மனுவை பரிசீலனை செய்து மின்சாரம் வழங்கப்படும் என கூறிய உதவிச் செயற்பொறியாளர் சந்திரசேகரன், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் சீனிவாசன், லஞ்சப்பணத்தை வழங்க விரும்பாத அவர், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டு துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் பொடி தடவிய, 10 ஆயிரம் ரூபாயை, பணத்தை புகார்தாரரான சீனிவாசனிடம் இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் கொடுத்தனுப்பினர். அதை எடுத்து கொண்டு கே.கே நகர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அவர், உதவிச் செயற்பொறியாளர் சந்திரசேகரிடம் ரசாயன பொடி கலக்கப்பட்ட லஞ்சப் பணத்தை கொடுக்க பெற்றுக் கொண்டு தனது தனிப்பட்ட உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி(வயது 34), என்பவரிடம் கொடுத்து அவர் வாங்கி மறைத்து வைத்துக் கொண்டு போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தும் அரசு மருத்துவமனையில் இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.கே.கே நகர் மின்வாரிய அலுவலக உதவிச் செயற்பொறியாளர் சந்திரசேகர்,
மின்வாரிய உதவிச் செயற்பொறியாளரின் தனிப்பட்ட உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி,

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...