Wednesday, 26 February 2025

பேரணாம்பட்டு சார்பதிவாளர் ராதிகாவின் தில்லாலங்கடி வேலைகள்: தமிழ்நாடு பதிவுத் துறை தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பங்களாமேட்டிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வாணியம்பாடியை சேர்ந்த ராதிகா என்பவர் பணியாற்றி வருகிறார். பேரணாம்பட்டு சார் பதிவாளராக ராதிகா என்றைக்கு கால் எடுத்து வைத்தாரோ சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அன்று பிடித்தது சனியன் என்றே சொல்லலாம். சின்னசின்ன விஷயங்களுக்கெல்லாம் 30-40 வருட ஆவணங்களை கேட்பதாகவும் ,அதைக் கொடுக்க மறுத்தால் எனக்கு ஏதாவது கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மறைமுக லஞ்சம் கேட்பதாகவும். பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சார் பதிவாளர் ராதிகாவின் இந்த அடாவடி போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினரே கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியான தலித் நா. சே. பாஸ்கரன் தலைமையில் பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பேரணாம்பட்டு குப்பைமேடு, தரைக்காடு பகுதியைச் சேர்ந்த சலீம் பாஷா என்பவர் தனது மகளின் பிறப்புச் சான்றிதழுக்காக சார் பதிவாளர் ராதிகாவை நாடியிருக்கிறார். ராதிகாவோ சலீம் பாஷாவை இன்று வா, நாளை வா என்று இரண்டு மாதங்களாக அலைக்கழிக்க விட்டிருக்கிறார். ஒரு நாள் இதை கவனித்த சார் பதிவாளர் அலுவலக ஊழியர் போல் செயல்படும் வெளிநபரான அம்ஜத் நானும் உங்களை இங்கு வெகு நாட்களாக பார்க்கிறேன். என்ன விஷயம் என்று விபரம் கேட்டுள்ளார். சலிம் பாஷாவும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். சலீம் பாஷா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன அம்ஜத் பிறப்பு, இறப்பு சான்றிதழ் எல்லாம் நகராட்சிதான் கவனிக்கிறது. நீங்கள் அங்கு சென்று விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அம்ஜத் சொன்னதைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டே சலீம் பாஷா இந்த அம்மா இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா? என்று நொந்து போய் உள்ளார். இப்படி தனது வேலை என்ன என்பதே தெரியாமல் தண்டச் சம்பளம் பெறும் சார் பதிவாளர் ராதிகாவின் செயலைக் கண்டு பேரணாம்பட்டு நகரமே கை கொட்டி சிரிப்பதாக, பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தலைவர் இந்த சார் பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுத்து இவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பத்திர பதிவுத்துறை தலைவரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இவர் இந்த பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பணியிடம் மாறுதலாகி வந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் கூட இவர் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படாமலே இருக்கிறார். எனவே இந்தப் பெண் சார்பதிவாளர் ராதிகா என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஒழுங்குமுறை விதிக்கு உட்பட்டு செயல்படுகிறாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...