வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 60). இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் வட்டிக்கு பணம் விடுவது என்று லைசன்ஸ் இல்லாமல் கந்துவட்டி விட்டு வருகிறார். அத்துடன் இவரது மூன்றாவது மனைவியும் கந்துவட்டி விட்டு வருகிறார். இதனால் பணம் கொழிக்க தொடங்கியது. இதனால் இவர்கள் யாரையும் மதிப்பது கிடையாது. இந்த ஏரியாவில் மகா மாரியம்மன் கோயிலை கட்டி அதில் தனக்குத்தானே தர்மகர்த்தா பட்டத்தை சூட்டிக்கொண்டு தெனாவெட்டாக வலம் வந்து கொண்டுள்ளார் ஆசைத்தம்பி. இவர் தனக்கு பக்கபலமாக சில ரவுடிகளை துணைக்கு வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது பிஷப் டேவிட் நகரில் நடக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு இவர் ஒரு மூல காரணமாக உள்ளார். அதாவது பிஷப் டேவிட் நகரில் ஆங்காங்கே கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள், குட்கா மற்றும் கள்ள மது பாட்டில்கள் விற்பனை, விபச்சாரம் மற்றும் கள்ளச்சாராயம் என அனைத்தும் இங்கே அமோகமாக நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இவர்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு தனக்கு கிடைக்கும் மாமூலை மட்டும் வாங்கிக் கொண்டு கண்டும் காணாதது போல இருந்து கொள்கிறார். அத்துடன் கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. இதை பத்திரிகை வாயிலாக சொல்வதில் மிகவும் வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் இந்த பகுதியில் பயங்கர ஆயுதங்களான வீச்சறிவாள் , சுளுக்கி, ஈட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதோடு தங்களது இரு சக்கர வாகனங்களிலும் வீச்சறிவாள்களை வைத்துக்கொண்டு பல ரவுடிகள் வலம் வந்து கொண்டுள்ளனர் என்று பொதுமக்கள் தரப்பில் பயத்துடனும், அச்சத்துடனும், நடுங்கிக் கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கடந்த ஓராண்டுக்கு மேலாக இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை பிஷப் டேவிட் நகரில் நிலவி வருகிறது. ஆனால் இதை காவல்துறையிலுள்ள தனிப்பிரிவு போலீசாரும் கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பார்வைக்கு இதுநாள் வரை கொண்டு செல்லவில்லை. தெற்கு போலீசாரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். இப்படி யாரும் கண்டு கொள்ளாமல் விட்டதால் இங்கே ஆசைத்தம்பியின் கை ஓங்கி விட்டது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் நான் தாழ்த்தப்பட்டவன். எனது ஜாதியே எனக்கு கவசம் போல் உள்ளது என்று சொல்லிக்கொண்டு பலரை மிரட்டிக்கொண்டு வலம் வந்தபடியுள்ளார் ஆசைத்தம்பி என்று சொன்னால் அது மிகையாகாது. கேட்டால் என்னிடம் பணம் உள்ளது. நான் பணத்தை வைத்து பார்த்துக் கொள்வேன். காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய இயலாது. காவல்துறை என்னை கண்டாலே அஞ்சி நடுங்கும் என்று காவல்துறையை மிரட்டும் வகையில் இவர் செயல்படுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவரது செயல்பாடு கொடூரமாக மாறியுள்ளது. இவர் கந்து வட்டிக்கு கொடுக்கும் பணத்தை ரவுடிகளை வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளை கூறி திட்டி அவர்கள் வீடுகளுக்கு சென்று ரகளை செய்து பணத்தை வசூல் செய்து கொள்கிறார். ஆனால் இவர் பிறரிடம் வாங்கும் பணத்தை திருப்பித் தருவதில்லை. அப்படி பணத்தை கொடுத்தவர்கள் கேட்டால் நான் தாழ்த்தப்பட்டவன் என்னை ஒன்றும் செய்ய இயலாது நான் காவல்துறையை நம்புபவன் கிடையாது என்று காவல்துறையை மிகவும் ஏளனமாக பேசி வருகிறார் என்றுதான் சொல்லலாம். இவ்வாறு ஒரு அசாதாரண சூழ்நிலை பிஷப் டேவிட் நகரில் நிலவி வருகிறது. அதேபோன்று ஆசைத்தம்பி விடும் கந்துவட்டி தொடர்பாக அவர் மீது புகார் கொடுப்பதற்கு பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்றனர். என் மீது புகார் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று அவர்களை மிரட்டுவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆதலால் பிஷப் டேவிட் நகரில் காவல்துறை குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு தனி படையை அமைத்து இந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினால் மட்டுமே பொதுமக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நிலைமை இங்கு நிலவுகிறது. ஆதலால் பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மதரீதியாக மோதலை ஏற்படுத்தவும் இவர் அடித்தளம் இட்டு வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஆதலால் இந்த பிஷப் டேவிட் நகரில் காவல்துறையினர் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதே இந்த பகுதியில் வாழும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment