சென்னை திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.78,410 சிக்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில் திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.78,410 சிக்கியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ள கோபி என்பவர், பத்திர எழுத்தரிடம், பத்திரப்பதிவு செய்ய லஞ்ச கையூட்டு வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.
சார்பதிவாளர் ஜெயராஜுக்காக, பத்திர எழுத்தர்களிடமிருந்து, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் கோபி லஞ்ப் பணத்தை வசூலித்து மாலை நேரத்தில் கொடுப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தகவலின் பெயரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.78,410 பணத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment