Monday, 24 February 2025

பாரத ரத்னா APJ அப்துல் கலாமின் கனவு திட்டமான நாட்டில் 10 கோடி மரகன்றுகள் நடுதல் விழிப்புணர்வு துவக்க விழா!

நமது முன்னாள் இந்தியா குடியரசு பாரத ரத்னா ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான  இந்தியா முழுவதும் 10 கோடி மர கன்றுகள் நடுதல். அவரின் கனவை நிறைவேற்ற அனைத்திந்திய காலம் கனவு அறக்கட்டளை சார்பாக 2025 மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசிய அளவிலான மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு துவக்க விழா-நிறுவனர் சென்னையன் தலைமையில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, அனைத்திந்திய வேளாண் மாணவர் சங்கத்தின் தேசியச் செயலாளர், புதுதில்லி முனைவர்.வினோத் சிறப்பு அழைப்பளர்களாகவும் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சிவம் , செந்தில் (DM Tasmarc), அறக்கட்டளையின் அறங்காவலர் ,ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சமுக ஆர்வலர்கள் சதீஷ் , ஹரிஹரன், செந்தில் , சாமிக்கண்ணு , அய்யன்துரை மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய நோக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள்  2025 பேர் மூலம் 2025 மரகன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்  இந்நிகழ்ச்சியில் தேசிய அளவிலான மரம் நடுவரின் விழிப்புணர்வு பற்றி உங்களது ஒரு நிமிட வீடியோ மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவத்தை பற்றி பதிவு செய்து பங்கு பெறுமாறு அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...