Saturday, 22 February 2025

பொதுமக்கள், உறவினர்கள் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு விஏஓ மீது பழி போடும் ஊராட்சி மன்ற தலைவர்.. துணைத் தலைவர்!

வேலூர் மாவட்டம், மேல்பாடி அருகே எருக்கம்பட்டு ஊராட்சியில் வீட்டுமனை கேட்டு பட்டா தர கோரி விண்ணப்பித்தவர்களிடம் தலா ரூ. 20 ஆயிரம் முதல் பணத்தை வசூல் செய்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் விஏஓ மீது பழி போட்டுவிட்டு நாடகம் ஆடுவது அம்பலத்துக்கு வந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வள்ளிமலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சியில் பாலாஜி என்பவர் விஏஓ-வாக 2023-24 கல்வி ஆண்டில் பணிபுரிந்தார். அப்போது ராஜப்பன் நகர் என்ற பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சிலர் விண்ணப்பம் செய்திருந்தனர். 
இதனை தெரிந்து கொண்ட எருக்கம்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுமார் மற்றும் பெருமாள்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டி என்கிற கோட்டீஸ்வரன் ஆகியோர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஐந்து ஏக்கர் உள்ளது. இதில் 90 பேருக்கு பட்டா வழங்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதில் 10 பேருக்கு ஏற்கனவே பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 24 பேர் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு செய்தனர். இதில் 16 பேர் எருக்கம்பட்டு துணைத்தலைவர் சுகுமார் மற்றும் பெருமாள் குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் கோட்டி என்கிற கோட்டீஸ்வரன் ஆகியோர் தங்களுக்கு நெருங்கிய உறவினர்களான சித்தப்பா, பெரியப்பா, மாமியார், தாய் உள்ளிட்ட உறவினர்கள் பெயர்களை மாற்றி மாற்றி போட்டு பட்டா கேட்டு மனு செய்திருந்தனர். இதனை தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி விசாரணை நடத்தியுள்ளார். 

இதனால் பாலாஜிக்கு அன்று முதல் இந்த துணைத் தலைவர் சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டி என்கிற கோட்டீஸ்வரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடமும், வேலூர் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியரிடமும் பாலாஜி, மனு கொடுத்துள்ளார். மனு விசாரணையிலிருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இலவச மனை பட்டா கோரி விண்ணப்பித்த 16 பேரான சுகுமார், இந்திரா காந்தி, ராமன், மணி, துரைசாமி, வில்வநாதன், குமாரசாமி, சாந்தி, பட்டு, நதியா, அஞ்சம்மாள், மலர், அம்பிகா, பத்மா, சின்னம்மாள் உள்ளிட்ட சிலர் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் சுகுமாருக்கும் கோட்டி என்கிற கோட்டீஸ்வரனுக்கும் உறவினர்கள். அவர்களுடைய உறவினர்களுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கும், துணை தலைவருக்கும் பட்டா வழங்க முடியாது என்று கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி தெரிவித்துள்ளார்.  

இதனால் பாலாஜி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அவரை கண்ட இடமெல்லாம் கொலை மிரட்டல் விடுப்பது அருவெறுக்கத் தக்க ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டுவது என்று இவர்கள் தொடர்ந்து அவரிடம் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த விஏஓ பாலாஜி 65 புத்தூர் என்ற இடத்திற்கு பணியிட மாறுதலாகி சென்று விட்டார். இந்நிலையில் பாலாஜி அனுப்பிய கோப்பு வருவாய் ஆய்வாளர் ,கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என அனைவரையும் தாண்டி தற்போது மாவட்ட ஆட்சியாளரிடம் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்வது என்று திகைத்து கொண்டு இருந்தனர். குறிப்பாக இவர்கள் இருவரும் மனைபட்டாவுக்காக தனது உறவினர்கள் என்று கூட பார்க்காமல் தலா ரூபாய் 20000 முதல் பணத்தை வசூல் செய்து விட்டனர் பஞ்சமா பாதகர்கள். பணம் கொடுத்தவர்கள் நச்சரிக்கவே இவர்கள் விஏஓ தங்களை ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது பழியை அவிழ்த்துவிட்டு இவர்கள் படு சாமர்த்தியமாக சாதுர்யமாக தப்பிவிட்டனர் என்பதுதான் நிதர்சன உண்மை. இது தெரியாமல் பலர் விஏஓ மீது பழி போட்டு விளையாடிக் கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவர்கள் மீது காவல்துறையும், வருவாய்த்துறையும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடிப்படை காரணமே அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு இந்த விஏஓ பாலாஜி முறைப்படி விசாரித்து பட்டா வழங்கியுள்ளார். இந்த மணிகண்டனுக்கும் இந்த சுகுமார் ,கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வருகிறது. தங்களது எதிரியான மணிகண்டனுக்கு பட்டா வழங்கி விட்டு நீ நிம்மதியாக இருக்க முடியாது என்று விஏஓ பாலாஜியை இவர்கள் தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தது தான் உண்மை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் 22 பேர் பட்டா கேட்டு முறையிட்டனர். இதில் 15 பேர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரின் உறவினர்கள் ஆவார்கள். ஆதலால் இவர்களுக்கு தர இயலாது என்று விஏஓ பாலாஜி திட்டவட்டமாக குறிப்பிட்டுவிட்டார் .மற்ற ஏழு பேர் உண்மையில் பட்டா வாங்குவதற்கு தகுதி உள்ளவர்கள் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். இதில் தான் இவர்கள் இருவருக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவலத்தில் நின்றிருந்த போது முன்னாள் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் பாலாஜியை சுகுமார் மற்றும் கோட்டீஸ்வரன் மிரட்டியுள்ளனர். இது அவருக்கு நன்கு தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொருவராக உரிய முறையில் விசாரணை நடத்தினால் உண்மை என்ன என்பது தெரியவரும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பட்டாவை தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டு பேரை அழைத்து பட்டா வழங்க வேண்டும் என மிரட்டி வருகின்றனர். கோடீஸ்வரன், சுகுமாரும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதில் மணிகண்டன் உடைய சொந்த இடத்தில் சாலை போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மணிகண்டனும் சுகுமாரும் மோதி கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. அத்துடன் ராணுவ வீரர் பெயரில் பட்டா கேட்டு அதிலேயும் மிரட்டி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்பதை சொன்னதால் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் விஏஓவை இவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட எருக்கம்பட்டுக்கு வந்ததிலிருந்து ஒன்றரை மாதத்துக்குள் பாலாஜிக்கு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. கிராம நத்தம் சர்வே எண் 32 / 9 சி 1ஏ இதில் லட்சுமணன் பட்டா ஆகியுள்ளது. இது டாக்குமெண்ட்டும் ஆகியுள்ளது. இதை போல ஆவணங்கள் தயார் செய்து அதை சான்றிதழ் என்று சொல்லிவிட்டு பிள்ளையின் பெயரை எடுத்துவிட்டு சான்றிதழ் வாங்கியுள்ளனர். அதாவது இந்த லட்சுமணனும் எதிர்தரப்பினரும் மாமன், மைத்துனர் முறை வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி இவர்களுக்குள் உள்ள பிரச்சனையை திசை திருப்பி பணம் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டு விட்டு அப்பாவி விஏஓவை பலிகடா ஆக்க பார்க்கின்றனர் இந்த துணைத் தலைவர் சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன் செய்த பணியாளர்களை அழைத்து வந்து காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதி நேர்மை என்றும் சாகவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் உண்மையாக உழைப்பவர்களுக்கு அரசு செய்யும் பேரு உதவியாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மற்றும் பொதுமக்கள். மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...