Sunday, 23 February 2025

காட்பாடி, விருதம்பட்டு, பிரம்மபுரம், திருவலம் காவல் நிலையங்களுக்கு ஆய்வாளர்கள் இல்லாத அவலம்: தலையில்லாத முண்டம் போல் செயல்படும் பரிதாபம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி, விருதம்பட்டு, பிரம்மபுரம் ,திருவலம் ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு காவல் ஆய்வாளர்கள் இல்லாத அவலம் தொடர்கதையாகியுள்ளது. இதனால் தலை இல்லாத முண்டம் போல் இந்த காவல் நிலையங்கள் செயல்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காட்பாடி, விருதம்பட்டு ஒரு சர்க்கிளாகவும், பிரம்மபுரம், திருவலம் ஒரு சர்க்கிளாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்த சர்க்கிள்களில் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக காவல் ஆய்வாளர்கள் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உதவி காவல் ஆய்வாளர்களின் கை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் தங்கள் விருப்பம் போல் பணியாற்றுகின்றனர். காலை ஏழு முப்பது மணிக்கு நடைபெறும் ரோல் கால் எனப்படும் காவலர்கள் பணிபிரிக்கும் பணிகள் நடைபெறுவதே கிடையாது. அவரவர் விருப்பம் போல் காவல் நிலையத்துக்கு வருவதும், போவதுமாக உள்ளனர். காவல் நிலையங்கள் திறந்த வீடு போல் ஆகிவிட்டது பரிதாபத்திற்குரியது. இதை கண்காணிக்க வேண்டிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனியும் நமக்கென்ன என்ற ரீதியில் பணியாற்றி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நான்கு காவல் நிலையங்களிலும் உதவி ஆய்வாளர்கள் அவரவர் விருப்பம் போல் கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, மாமூல் வசூல் செய்வது என்று சுற்றித் திரிகின்றனர் தவிர நேரடியாக காவல் நிலையங்களுக்கு வரும் பணிகளை சரிவர கவனிப்பது கிடையாது. பணம் வரும் புகார்களை மட்டும் தேர்வு செய்து அதில் வரும் பணத்தை தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காட்பாடியில் மனோகரன், மணிகண்டன். விருதம்பட்டில் ஆதர்ஷ். பிரம்மபுரத்தில் கார்த்தி, பாபு. திருவலத்தில் அவரவர் விருப்பம் போல் பணியாற்றுகின்றனர். இப்படி இந்த காவல் நிலையங்கள் கட்டுப்பாடின்றி செயல்பட ஆரம்பித்து விட்டன. இதற்கு காட்பாடி, விருதம்பட்டு காவல் நிலையங்களுக்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) லத்தேரியில் பணியாற்றும் முரளிதரன், பிரம்மபுரம், திருவலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு மேல்பாடி காவல் ஆய்வாளர் கருணா (பொறுப்பு) காவல் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சரிவர இந்த காவல் நிலையங்களை கண்காணிப்பதும் கிடையாது. ஏதோ தேவைப்பட்டால் வருவதும் போவதுமாக உள்ளனர் என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்படி தலை இல்லாத முண்டம் போல் இந்த நான்கு காவல் நிலையங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. ஆதலால் விரைவில் வேலூர் சரக டிஐஜி தேவராணி, ஐபிஎஸ்., வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் போன்ற காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் காட்பாடி, விருதம்பட்டு ,பிரம்மபுரம், திருவலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உடனடியாக காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்தும் அல்லது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்., வேறு மாவட்டங்களில் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களை இந்த நான்கு காவல் நிலையங்களுக்கும் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்த பகுதி வாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல் ஆய்வாளர்கள் இல்லாததால் அவரவர் விருப்பம் போல் பணியாற்றும் அசாதாரண சூழ்நிலையும் இந்த நான்கு காவல் நிலையங்களில் நிலவுவதால் ஒரு கட்டுக்கோப்பாகவும் கட்டுப்பாடாகவும் பணியாற்றாமல் தங்கள் விருப்பம் போல் பணியாற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று சொல்லலாம். இந்த நிலைமை மாறவேண்டும். சீருடை பணியாளர்களுக்கு என்று உள்ள கட்டுப்பாடுகளை இவர்கள் பின்பற்றி நடக்க காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்., விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த காவல் நிலையங்களுக்கு விரைவில் காவல் ஆய்வாளர்  நியமிக்கப்படுவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...