வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில், புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில் ஓய்வூதியதாரர்கள் சங்க துவக்க விழா மற்றும் இலவச வேட்டி சேலை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. உழைப்பாளிகளின் பாதுகாவலன் நிறுவனரும் மாநிலத் தலைவருமான டி.வேல்முருகன் தலைமையிலும், மாநில துணைச் செயலாளர் சி. சிவானந்தம் முன்னிலையிலும், மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்புரையாற்றுகையில் குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் மாநில செயலாளர் கயல்விழி, மாநிலத் துணைத் தலைவர் முருகன், மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாநிலத் துணைச் செயலாளர் திலகம் வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர் நல வாரிய உறுப்பினருமான தொழிலதிபர் ஆர்.டி.பழனி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உறுப்பினர் ப.கணேசன், வேலூர் மாநகராட்சி, 6-வார்டு மாமன்ற உறுப்பினரும் காட்பாடி ஊர் தர்மகர்த்தா கே.ஜி.சீனிவாசன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன், கொள்கை பரப்புச் செயலாளர் நெல்லை ஜீவா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நஞ்சப்பன், மண்டல தலைவர் எஸ்.வில்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உழைப்பாளிகளின் வியர்வை குறித்து சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர். உழைப்பாளிகளின் பாதுகாவலரும், நிறுவனரும், மாநிலத் தலைவருமான டி.வேல்முருகன், வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகளுக்கு நான் என்றென்றும் இரவு பகல் பாராமல் எந்நேரமும் உங்களுக்காக முழு நேரம் உழைப்பேன் என சிறப்புரையாற்றினார். உழைப்பாளிகளுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அனைத்து நல திட்டங்களையும் உடனுக்குடன் உங்களை வந்தடைய அயராது பாடுபடுவேன் எனவும் பேசினார். இதனைத் தொடர்ந்து 12 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இதனை மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைத்து உடனடியாக அனைத்து கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.
மேலும், வேலூர் மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், பொன் வடிவேல், உமாசங்கர், சுயராஜ், ரமேஷ் சீனிவாசன், சண்முகம், உமாபதி, மணி, வெங்கடசாமி, ஞானசௌந்தரி, விஜயகுமார், புவனேஸ்வரி, சாந்தி, ஆதிகேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், நீலகண்டன், உஷாமீரா, சுப்பிரமணி, கேசவன், ஆறுமுகம், தனலட்சுமி மற்றும் பலர், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட பொருளாளர் ரோஸ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பார்த்திபன், பொருளாளர் சங்கீதா, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர், ஒன்றிய பொறுப்பாளர்கள் காட்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகர், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் கோட்டீஸ்வரி, அணைக்கட்டு ஒன்றிய தலைவர் ஷர்மிளா, எஸ்.ஞானசௌந்தரி, கிளை பொறுப்பாளர்கள் சேவூர் ஜீவா, தொப்புளா மோட்டூர் எஸ் தக்ஷிணாமூர்த்தி, கம்பராஜபுரம் வில்வம், மைதிலி, தனலட்சுமி, எஸ்.என்.புதூர் மேகலா, ஏரந்தாங்கல் சரளாதேவி, குருநாதபுரம் விஜயா மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டு இந்த நலத்திட்ட விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக குமார், சின்னதுரை மற்றும் ஜெகதீசன் ஆகியோர் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment