Wednesday, 12 February 2025

ஏழை எளியோர் பயன்படுத்தக்கூடிய சமூதாயக் கூடத்தில் சிமென்ட் மூட்டையா?

ஏழை மக்களுக்காக அரசாங்க அமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தில் சிமென்ட் மூட்டைகளை அடுக்கிவைக்கின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று  பகுதிவாசிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டுமாநகர், ராள்ளபாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1998-1999ம் ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் 10 வருடத்திற்கு பிறகு இந்த சமுதாயக்கூடம் பழுதடைந்து காணப்பட்டது. அதன் பிறகு சமுதாய கூடத்தில் அதிமுக ஆட்சியில் அரசின் ''அம்மா" சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் சிறுசிறு நிகழ்ச்சிகள் நடத்த ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சிமென்ட் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றி சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...