Thursday, 20 February 2025

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் மர்மங்கள்?

தென்காசி மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது?

போலியான கடிதங்கள் மூலம் அரசு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த  செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் முறைகேடுகள் பல செய்தித்தாள்களிலும் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததன் எதிரொலி அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி  மாற்றப்பட்டார். உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மீது எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம்  எடுக்கவில்லை மேலும் இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார். அதன் பின் வந்த செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி பணியில் அமர்த்தபட்டார். மேலும் கடந்த காலங்களில் சில நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தில் முறைகேடாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்கள் கொடுத்ததில் பல முறைகேடுகள் சாரல் திருவிழாவிற்கு வழங்கப்பட்ட விளம்பரத்தில் அளவுக்கு மீறிய கட்டணங்கள் மாவட்ட ஆட்சியாளர் கள ஆய்வு செய்ய வேண்டும் இவைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியாளரால் கள ஆய்வு செய்து ஒரு தெளிவான முடிவு எதிர்காலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பல தடவை செய்தி மூலம் கடிதங்கள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மீது பல குற்றச்சாட்டுகள் முறைகேடுகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியாளர் செய்தியாளர்கள் கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதியன்று கூட்டப்பட்டது கூட்டத்தில் உதவி செய்து மக்கள் தொடர்பு அதிகாரி மீது பல குற்றச்சாட்டுகள் கூறியதன் விளைவாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையில் செய்தியாளர்கள் அமைதி காத்தனர் இந்நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த செய்தியாளர் ஒருவர் தனக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்றும் தன்னை அவமதிப்பதாக கூறி ஆணையத்திற்கு சென்று நீதி கிடைக்க போராடினார். இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது இதன் எதிரொலி மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக அச்செய்தியாளருக்கு பேருந்து பயண அட்டை ஆண்டின் முடிவில் இரண்டு மாதத்திற்கு பின்பாக வழங்கப்பட்டது. அதன் பின் 2025 ஆம் ஆண்டிற்கான பேருந்து பயண அட்டை அரசு அங்கீகார அட்டை வழங்குவதில் மீண்டும் குளறுபடிகள் நடைபெற்றது கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்தி மக்கள் தொடர்பு துறையில் என்ன நடக்கிறது என்று மர்மமாக உள்ளது. செய்தியாளர்களுக்கு செய்திகளை சேகரிப்பதற்கு மற்றும் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடம்  இதுவரை இல்லை இதனால் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலுள்ள கட்டிடங்களின் ஓரத்திலும் தெருக்களின் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது புதிய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகளின் அலட்சியத்தால் புதிய கட்டிடம் பல கோடி ரூபாய் அளவில் கட்டியும் பயன்பாட்டிற்கு வரவில்லை இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விளம்பரத்தின் குளறுபடியால் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி செய்தியாளர்கள் குரூப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதுவே தமிழகத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வு ஆகும் இது செய்தியாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இரண்டு ஆண்டுகளாக குழப்பங்கள் நிறைந்த செய்தி மக்கள் தொடர்பு துறையாகவும் மற்றும் செய்தியாளர்கள் பல புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லாமல் மேலோட்டமாக நடப்பதால் மர்மம் நிறைந்த ஒரு குளறுபடியான துறையாக உள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களில் எவ்வித குழப்பமும் இல்லாமல் தெளிவான நிர்வாகமும் முடிவும் இருக்க வேண்டும் என்று மூத்த செய்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கடந்த காலங்களில் பேருந்து பயண அட்டை, அரசு அங்கீகார அட்டை அருகில் மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் மற்ற மாவட்ட நிருபர்களுக்கும் வழங்கியுள்ள நிகழ்வு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சியாளர் கடந்த காலங்களில் வழங்கிய முறைகேடுகளை கள ஆய்வு செய்து முறைப்படியாக உள்ள செய்தியாளர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க ஆவணம் செய்யும்படி மூத்த பத்திரிகையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆகையால் இக்குளறுபடிகளை கள ஆய்வு செய்து முறைப்படியான பேருந்து பயண அட்டை, அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியாளர் அனைத்து செய்தியாளர்களையும் அழைத்து மாதம் ஒருமுறை சந்திப்பு கூட்டம் நடத்தினால் இக்குறைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது பாகுபாடு இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தினால் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் , குளறுபடிகள் இல்லாமல் செய்தித்துறை இயங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்! 

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...