Wednesday, 19 February 2025

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரில் கள ஆய்வு!

வேலூர் போக்குவரத்தை சீர் செய்வது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்  தலைமையில் கீரின் சர்க்கிளில் ஆலோசனை நடந்தது.
வேலூர் கிரீன் சர்க்கிளில் சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இப்போக்குவரத்து மாற்றத்தினால் இரு சக்கர வாகனம்  மற்றும் கார்கள் சுற்றி செல்வதற்கு சிரமமாக உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தன் பேரில் தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்  தலைமையில் கீரின் சர்க்கிள் பகுதியில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் ரஜினி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் மட்டும் அந்த வழியாகச் செல்லலாம் என்று காவல் கண்காணிப்பாளர் அனுமதித்தார். அப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...