நாட்டில் சிறார்களுக்கு நேரிடும் பாலியல் குற்றங்களிலிருந்து தடுக்கும் விதமாக அரசாங்கம் கொண்டு வந்தது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் மாநிலங்களைகளில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்தியத் தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பாலியல் குற்றம் புரியும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கும் நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய 255 ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் போஸ்கோ வழக்கின் கைது செய்யப்பட்டனர். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறைக்கு இந்த சம்பவங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக மட்டும் அல்லாது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மந்திரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கையோடு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாலியல் புகார்களில் சிக்கும் ஆசியர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதற்காக 2012 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டாய ஓய்வு பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளும் அரசு பள்ளிகள் என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் சான்றிதழ்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டாலும் அரசாணைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது விவகாரம் பெரிதானதை அடுத்து பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள் மீது அரசாணைப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பாலியல் வழக்குகளின் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி பட்டியலை தயார் செய்த அதிகாரிகள் அரசிடம் வழங்கியுள்ளனர் .முதற்கட்ட விசாரணை அடிப்படையில் என்பது தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் 80 பேர், பள்ளிக் கல்வித் துறையில் 175 ஆசிரியர்கள் என மொத்தம் 255 பேர் மீது பாலியல் புகார் வழக்குகள் உள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நடவடிக்கை குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை செயலர் ஆய்வு செய்ய இருக்கும் நிலையில் அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பாலியல் தொல்லை புகாரில் சிக்கி குற்றம் நிரூபணமான ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment