Wednesday, 26 February 2025

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 25ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலஷ்மிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிரவண தீபத்தை ஏற்றி பின்பக்கமாக இடமிருந்து வலமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலட்சுமி விக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் சர்வ துளசி அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்தியது போன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகுவிமரிசையாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...