தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான நடிகை விஜயலட்சுமி இவர் கடந்த 1997-ம் ஆண்டு நாகமண்டல" என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் மலையாளம், இந்தி, தமிழ் திரை உலகில் 2001-ம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம், அதனைத் தொடர்ந்து பாஸ் என்கின்ற பாஸ்கரன், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, நடிகரும், இயக்குனர், அரசியல் தலைவர் சீமானை தொடர்ந்து விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். முன்னதாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும் சீமானுடன் தான் இருக்கும் சில வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டுயிருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் வழக்குப் படுதீவிரம் அடைந்துள்ளது. தம் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.
அப்போது, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு சீமானை நடிகை விஜயலட்சுமி அணுகி இருக்கிறார்; அப்போது விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து உறவு வைத்திருந்தார் சீமான். ஆனால் சீமான், திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் மீது விஜயலட்சுமிக்கு எந்த ஒரு காதலும் இல்லை. 2008-ம் ஆண்டே இருவரும் மதுரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டது, 6 முறை கருக்கலைப்புக்குள்ளாக்கப்பட்டது விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான குற்றச்சாட்டுகளை 12 வார விசாரணையில் உறுதி செய்தால் உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என்கின்றன அரசு வட்டாரங்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் 2-வது மனைவி மகள் கயல்விழியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் 2008-ம் ஆண்டு முதலே சீமானுடன் சில ஆண்டுகள் மனைவியாக தாம் குடும்பம் நடத்தினேன்; தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான்; திருமண ஆசையை காட்டியே 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார் சீமான் என்பது நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக காவல் நிலையத்தில் 2 முறை விஜயலட்சுமி புகார் கொடுத்து பின்னர் சீமான் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தைகளில் அவற்றை வாபஸ் பெற்றார்.
அதேநேரத்தில் சீமான் தம் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குதான் தற்போது சீமானுக்கு பெரும் நெருக்கடியாகிவிட்டது.
சீமானின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளார்; அதனால் புகாரை வாபஸ் பெற்றார்; இது பலாத்கார வழக்கு என்பதால் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது; பலாத்கார வழக்கு என்பதால் அரசு தரப்பே விசாரணை நடத்தலாம்; திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைச் கூறி விஜயலட்சுமியை 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் சீமான். எனவே பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், இது தொடர்பாக 12 வாரத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
இதனால் நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு எதிராக மொத்தம் 15 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவில் சீமான் குற்றவாளிதான் என போலீசார் முடிவு செய்துவிட்டால் அவர் கைது செய்யப்படுவது உறுதியாகிவிடும். தற்போதைய நிலையில் விசாரணை நடத்தும் அதிகாரிகள்தான் சீமான் கைது குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடியவர்கள். இந்த கைது நடவடிக்கை 12 வார விசாரணைக்கு நடுவேயும் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை என்கின்றன. இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய நெருக்கடியில்தான் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், நாம் தமிழர் கட்சியினர் மிரட்டியதால் புகார்களை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி சொல்லவில்லை. நீதிபதிதான் அப்படி சொல்லி இருக்கிறார். விசாரணை இருக்கிறது அல்லவா? விசாரிக்கனும் இல்லையா? விசாரணை முடிவடையட்டும். பொறுத்திருங்க.. அதுக்குள்ள அவசரப்படாதீங்க.. இவ்வாறு சீமான் கூறினார்.
No comments:
Post a Comment