ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜேக்டோ-ஜியோ) பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை வழங்க கோருதல் தொகப்பூதிய, ஒப்பந்த ஊதிய முறைகளை ஒழித்து அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 25.02.2025 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் பங்ஙகேற்க ஆயத்த பிரச்சார கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஆர்.சுகுமாரன் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட தலைவர் வி.திருக்குமரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜி.தெய்வசிகாமணி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கே.தனசேகர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.புவனேஸ்வரி, தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாட்ட துணைத்தலைவர் கே.சங்கர், தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.ரவி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கனினி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எல்.மேனகா, ஆகியோர் பேசினர்.
காட்பாடி வட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வகை அலுவலகங்களில் மறியல் போராட்ட ஆயத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment