Monday, 17 February 2025

ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: தமிழக எல்லையில் கிருமி நாசினி தெளிப்பு!

ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கிருமி நாசினி தெளித்து அதில் பறவைகள் ஏதாவது கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை செய்த பின்னரே தமிழக எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, ஆந்திர எல்லை பகுதியான கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தி அதற்கு பின்னர் அந்த வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்களது கடமையை மறந்து செல்போனில் படம் மற்றும் பாடல்கள் பார்த்துக் கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டு உள்ளனர். தங்களது பணி நேரம் முடிந்ததும் ஏதோ கடமைக்கு வேலை செய்தது போல வீட்டிற்கு கிளம்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே கடமையை கண்ணும் கருத்துமாக செய்கின்றனர். இது போன்று நேரத்தை போக்கிவிட்டு அரசு ஊதியத்தை துச்சமென மதிக்கும் பணியாளர்களை துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கடமைக்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இனி வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...