Wednesday, 26 February 2025

பத்திரிகை நடத்துவது நூறு யானையைக் கட்டி தீனி போடுவது போல ... பத்திரிகையாளரிடம் பாகுபாடு காட்டாதீர்! பத்திரிகை நல வாரியத்தை அதன் விதிகளை மறு சீரமைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்
(TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தலின்படி மாநில அளவில் கவன ‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருச்சியில் 25/02/2025 - காலை 11 மணி அளவில் ஸ்ரீரங்கம், - பஸ் ஸ்டாண்ட் ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. 

செயலர் விஜயகுமார் வரவேற்றார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பையா பாண்டியன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அரசியல் சிம்மம் ஆசிரியர் இந்திரஜித் சிறப்புரையாற்றினார்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வல்லூறு மாத இதழ் ஆசிரியர் முனைவர் மோகன்ராம் பேசுகையில், பத்திரிகை நடத்துவது நூறு யானைகளை கட்டி பாதுகாப்பது போன்ற செயலாகும். அரசு மற்றும் அதிகாரிகளின் தவறுகளை எடுத்துரைத்து வரும் பத்திரிகைகள் தற்போதைய  அரசின் நடைமுறை சட்டங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரியம் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உரியது அல்ல. காலை நாளிதழ், மாலை நாளிதழ், வாரம் இருமுறை இதழ், மாத இதழ், புலனாய்வு இதழ்கள் என பல பத்திரிகைகள் வெளி வருகின்றன. ஆனால் ஒரு சில பத்திரிகைகளுக்கு மட்டுமே அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. அதுவும் தாலுகா ரீதியாக குக்கிராமத்தில் இருந்து குரல் கொடுத்து வரும் பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. எனவே பத்திரிக்கையாளரிடம் பாகுபாடு காட்டாமல் அனைத்து பத்திரிகையாளர்களும் பயனடையும் வகையில் அதாவது அச்சு, காட்சி, இணையதளம் உள்ளிட்ட அனைத்து ஊடகத்தினரும் பயன்பெறும் வகையில் நலவாரியம் செயல்பட வேண்டும் என்றார். அதே போன்று அந்தந்த மாவட்ட நிர்வாகமும் - மாவட்ட PRO - க்களும் - சிறிய - பெரிய பத்திரிகைகள் என எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமமான சலுகைகள் - மரியாதைகள் கொடுக்க வேண்டும். அந்தந்த மாவட்ட PRO -க்களின் WP - குருப்புகளிலும் அணைவரையும் வேறுபாடு பார்க்காமல் சேர்த்து அரசின்செய்திகளை பகிர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

தொடர்ந்து மனித விடியல் மோகன்,
லட்சியம் வெல்லும் சதாசிவம், மக்கள் மகுடம் மஸ்தான் உட்பட பலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிக்கையின் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் செயல்படுத்து செயல்படுத்து பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து என  அச்சு, காட்சி, பண்பலை, இணையதள ஊடகத்தினர் கோஷமிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்வகுமார், கணேசன், ரவிச்சந்திரன், செந்தில்குமார், சூர்யா, திருச்சி மாவட்ட லால்குடி தாலுகாவில் டோமினிக் கில்பர்ட், சிவசுப்பிரமணியன், மணப்பாறை தாலுகாவில் புலிகேசி, முசிறி தாலுகாவில் நவநீதகிருஷ்ணன் முருகன், நாகராஜ், மணிவண்ணன், லாரன்ஸ், ஸ்ரீரங்கம் தாலுகாவில் குகநாதன் - கவிஞர் TCP . லோகநாதன், சங்கரராமன், நரேந்திரன், திருப்பைஞ்சலி R. புலிகேசி - K கண்ணன் - மாயனூர் சதிஷ் - பஞ்சாபிகேசன் மணி, துறையூர்  நாகராஜ், மணிவண்ணன், லாரன்ஸ் , திருச்சிராப்பள்ளி மேற்கு தாலுகாவில் கண்ணன், சண்முகசுந்தரம், திருச்சிராப்பள்ளி கிழக்கு தாலுகாவில் மணிகண்டன், காந்தி எனகாலை, மாலை நாளிதழ், புலனாய்வு, பல்சுவை, இலக்கிய பருவ இதழ்களில், வாரம் இருமுறை இதழ், வார இதழ், மாத இதழ், காலாண்டிதழ் நடத்தும் பணியாற்றும் அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர், இணைய ஊடகத்தினர், பண்பலை ஊடகத்தினர், ஊடக புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள் அனைவரும் ஊடகத்தினர் பலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...