நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து அவற்றின் அசல் நிலைக்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டும் , வருவாய் துறையிலுள்ள சில கருப்பாடுகள் நீர் நிலையான குட்டையை தனிநபர்களிடம் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு பட்டா போட்டு இருவாரத்திற்கு முன்பு நடைபெற்ற மாஸ் கான்ட்ராக்ட்டில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாக்களை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் வேலூரில் நடைபெற்றிருக்கிறது.
விஏஓ வுக்கு ஒரு சட்டம் - தாசில்தார் , ஆர்.ஐ , மண்டல துணை தாசில்தார் போன்றவர்களுக்கு தனி சட்டமா?
வேலூர் மாவட்டம், கீழ்வழித்துணையாங்குப்பம் வட்டத்துக்குட்பட்ட பசுமத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த விஏஓ மணிவாசகன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
பசுமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மணிவாசகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவர் அந்த கிராமத்திற்குட்பட்ட நீர்நிலை புறம்போக்கு குட்டை இரண்டு ஏக்கர் இடத்தை 20 பேருக்கு நத்தம் பட்டா போட்டு தருவதாக கூறி 20 பேரிடம் 14 லட்சம் ரூபாய் லஞ்சமாக வசூலித்து பசுமத்தூர் கிராம அரசின் சர்வே எண் : 893 ,890 ஆகிய கொண்ட நீர்நிலை புறம்போக்கு குட்டையை கிராம நிர்வாக அலுவலகத்திலுள்ள வருவாய் துறை கணக்கு புத்தகத்தில் A- ரெஜிஸ்டரில் பல்வேறு தில்லாலங்கடி வேலை பார்த்ததும் இதற்கு உறுதுணையாக கீழ்ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலக அதிகாரி லோகேஷ் , பணி ஓய்வு நில அளவையர் கலை உடந்தையாக செயல்பட்டதாகவும். இதனைத் தொடர்ந்து கே.வி. குப்பம் பிற்கா வருவாய் ஆய்வாளர் திருமலை , மண்டலத் துணை தாசில்தார்கள் இந்துமதி, மணிமேகலை ஆகியோர்கள் நேரில் சென்று 20 பேருக்கு நத்தம் பட்டா வழங்கக்கூடிய இடத்தை நேரில் பார்க்காமலே பொதுமக்களுக்கு பயன்ப்படக்கூடிய நீர்நிலை புறம்போக்கு ஏரி குட்டையை இடத்தை விஏஓ மணிவாசகன் கொடுத்த லஞ்சத்தால் இவர் காட்டிய ஆவணங்களில் கையப்பமிட்டு தாசில்தார் சந்தோஷுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில்தான் தாசில்தார் சந்தோஷ் என்ன லஞ்சம் வாங்குவதில் குறைந்தவரா அவரும் பல லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக் கொண்டு மனம் போன போக்கில் நீர்நிலை புறம்போக்கு ஏரி குட்டை என்றும் பாராமல் 20 பேருக்கு தலா இரண்டு சென்ட் இடத்தை வழங்கிட கையொப்பமிட்டு நத்தம் பட்டாவாக வழங்கியுள்ளார்.
இந்த விஷயம் எப்படியோ கண்டுபிடித்த வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி இதுகுறித்து துரித விசாரணை நடத்திய பின்னர். பசுமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தில்லாலங்கடி விஏஓ மணிவாசகனுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் மற்றும் தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் (ஒழுங்குமுறை ... நடவடிக்கை உத்தரவு) விதி 17(இ)-ஐப் பயன்படுத்தி இடைநீக்கம் வழங்கி உத்தரவிட இதனைத் தொடர்ந்து, கடந்த 22.02.2025 சனிக்கிழமையன்று குடியாத்தம் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மணிவாசகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர் நிலை புறம்போக்கு குளம் குட்டை என்றும் பாராமல் பலருக்கும் நத்தம் பட்டா போட்டு வழங்கி வரும் கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தாசில்தார் சந்தோஷுக்கும் , இவருக்கு கீழ் பணிபுரியும் மண்டல துணை தாசில்தார் , வருவாய் ஆய்வாளர் ஆகிய நால்வரை உடனடியாக நிரந்தரமாக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் , ஒருங்கிணைந்த சான்றிதழ், புதிய மனை பிரிவுகளுக்கு என்ஓசி வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அதிகாரி முதல் வருவாய் ஆய்வாளர்கள், சர்வேர்கள் வரை தாசில்தார் சந்தோஷுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ்
இங்கு தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப் 2 வில் தேர்ச்சி பெற்று 2013 ஆம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார் பின்னர். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட தாராபடவேடு பிற்கா வருவாய் அலுவலராக பணிக்கு சேர்ந்த முதலே லஞ்சம் போன்ற விஷயங்களில் கைத் தேர்ந்தவராம் சந்தோஷ் என்கின்றனர் காட்பாடி பகுதியிலுள்ள இடைத்தரகர்கள். லஞ்சம் கொடுத்தால் எப்படிப்பட்ட வருவாய்த் துறையின் வேலையாக இருந்தாலும் முடித்துக் கொடுப்பாராம் சந்தோஷ் என்று கூறிவரும் புரோக்கர் சரவணன் என்பவர் காட்பாடி பகுதியில் புலம்பி வருவதை பலர் காதால் கேட்டு திட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி வேலூர் மாவட்ட ஆட்சியாளராக மூன்று வருடம் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று சென்றார் பெ. குமரவேல் பாண்டியன், ஐஏஎஸ்., இவர் வேலூர் கலெக்டராக இருந்தபோது, சந்தோஷ் என்பவர் PC -யாக பணியாற்றியதும் அதன் தொடர்ச்சியாகவே இவர் யாரையும் மதிப்பதில்லை என்றும் பலரது மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இவர் அதன் பின் 2023 ஆம் ஆண்டில் இதே கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராகவும் , அதன் பிறகு மாஜிஸ்திரேட் ட்ரைனிங் முடித்துவிட்டு குடியாத்தம் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராகவும் அதன் பிறகுதான் கே.வி. குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரெகுலர் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று வந்தார். ஆனால் இவர் ரெகுலர் தாசில்தாராக பொறுப்பேற்று இன்னும் 12 மாதங்கள் கூட நிறைவடையவில்லை அதற்குள் நீர்நிலை குட்டை நத்தம் இடத்தை பட்டா போட்டு விற்பனை செய்து உள்ளார்.
அதுமட்டுமின்றி தவறு இழைத்த விஏஓ மணிவாசகனை கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதோடு இந்த அனைத்து தவறிலும் தன்னை பலிக்கடாவாக ஆக்கிய தன்னைக் குற்றவாளி என்று உண்மையை ஒப்புக் கொண்டால் மூன்று மாதத்தில் மீண்டும் விஏஓ பதவி வழங்குவதாக தாசில்தார் சந்தோஷ் , விஏஓ அனீஸ் தலைமையில் வருவாய் துறை சங்கத்தினர் வற்புறுத்தி வருவதாகவும் ஒரு புறம் தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ பாதிக்கப்படுவது கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய பாமர மக்கள் தான் இப்போ அவர்களின் பட்டாக்கள் ரத்தும் , பணமும் ஸ்வாகா செய்துள்ளனர் கே.வி.குப்பம் வட்ட வருவாய்த்துறையில் உள்ளவர்கள்.
நீர்நிலை புறம்போக்கு குட்டை நத்தம் இடத்தை பட்டா போட்டு விற்பனை செய்த தாசில்தார் சந்தோஷ் மீது நடவடிக்கை பாயுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி நடவடிக்கை மேற்கொள்வாரா?
தமிழ்நாட்டில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 01.01.2000-க்குப் பிறகு நீர்நிலைகள் தொடர்பாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, நீர்நிலைகள் பழைய நிலைக்கு மீட்க வேண்டும்.
நீர்நிலைகளின் ஒருமைப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
நீர்நிலைகள் சமுதாயத்திற்கு சொந்தமானவை. தொழில்நுட்ப ரீதியாக அவை அரசாங்கத்துக்கு சொந்தமானவையாக இருக்கலாம். அவை இயற்கையின் கொடை என்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கிடைக்க வேண்டும். நீர்நிலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டதை நாம் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பராமரிப்பது அதிகாரிகளின் கடமை" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தங்களது உத்தரவில் தெரிவித்திருப்பதும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விவரங்களைக்கொண்ட இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும். அதில் ஒவ்வொரு நீர்நிலையையும் (குளங்கள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் போன்றவை உள்பட) தொடர்புடைய சர்வே எண், பகுதி, கிராமம், தாலுகா, மாவட்டம் என அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த இணையதளத்திலுள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிந்தால், தனிநபர் யார் வேண்டுமானாலும் இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதன்பேரில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்த அரசு ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment