Monday, 10 February 2025

பேரணாம்பட்டு தபால் நிலையத்தில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: மாவட்ட தபால் நிலைய சூப்பிரண்டு நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நாலு கம்பம் பகுதியில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு லோகநாதன் என்பவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த தபால் நிலையத்தில் ஒரு சில தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக ‌பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கிராம பகுதியிலுள்ள‌ கிளை தபால் நிலையங்களில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராமல் மிகவும் கால தாமதமாக வேலைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தபால்கள் உரியவர்களுக்கு மிகவும் கால தாமதமாக சென்று சேர்வதுமாகவும் தெரியவருகிறது. சரியான நேரத்திற்கு தபால்கள் உரியவர்களுக்கு சென்று சேர்வது இல்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக தலைமை தபால் நிலையத்தில் உதவி அலுவலராக பணியாற்றி‌ வரும் அரங்கநாதன் என்பவர் மீதி சில்லரைக்கு பதிலாக வாடிக்கையாளருக்கு தபால் அட்டையை வலுக்கட்டாயமாக திணித்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. தினமும் கடைசி திறப்பை இரண்டு மணிக்கெல்லாம் எடுத்து மூட்டை கட்டி அனுப்பி விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வேலூர் மாவட்ட தலைமை தபால் நிலைய சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்து தவறு செய்யும் தபால் ஊழியர்கள் மீது தக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...