தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்டகிளையின் சார்பில் 24 மணிநேர தர்ணா போராட்டம் நேற்று காலை 10 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் தொடங்கியது. இன்றைய தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி தலைமை தாங்கினார். முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்து பேசினார்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வி.ரமேஷ் ஊராக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் பா.ரவி சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் பரசுராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜ்குமார், முன்னாள் மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ஆண்டாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நவீன், உள்ளிட்டோர் வாழ்த்திபேசினர்.
மாவட்ட செயலாளர் எம் எஸ் தீனதயாளன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் பா.வேலு ம.தேவசேனா, தே.வேந்தன் லோ.தினகரன் இணைச் செயலாளர்கள் எம்.டி.டென்னிசன், ஆர்.செழியன் க.வெங்கடேஷ்குமார் , மு.இளந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் உடனே வழங்கப்பட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், எம்ஆர்பி செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் 11.02.2024 இன்று காலை 10 மணி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment