Monday, 10 February 2025

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிலம்பம் விளையாட்டு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டரங்கில் சிலம்பம் வீரர்களுக்கு பாராட்டு விழா, நாக்பூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும்
வெள்ளி பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கூட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...