பா.ஜ.க.வினர், பாஜக கூட்டணி கட்சியினர் மற்றும் அனைத்து இந்து அமைப்பினர்கள் என பலர் பங்கேற்று பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் கிழக்கு, துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பதவி ஏற்பு மற்றும் கௌரவிப்பு பதவிப்பிரமாண விழா, வேலூர் மாவட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 3ஆம் முறையாக தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாவட்டத் தலைவராக தசரதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி
மாநிலச் செயலாளர் எஸ்.என். கோட்ட பொறுப்பாளர் குணசேகர் மற்றும் கூட்டணி கட்சி மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் பா.ஜ.க. தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாவட்டத் தலைவர் பொறுப்பேற்ற தசரதனுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினர்.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ராஜா, தர்மலிங்கம், கமலநாதன், டெய்லர் ரவிசதீஷ்குமார், அருள் மற்றும் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநகரச் செயலாளர் ரகு, பாலு, பாலாஜி, புதிய நீதி கட்சி முரளி, தமிழ் மாநில காங்கிரஸ் அச்சுதன், இந்து முன்னணி மகேஷ் ஆகியோர், அனைத்து இந்து சார் குழுவினர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர்கள் என பலர் கலந்து கொண்டு மாவட்டத் தலைவர் தசரதனுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்து சேனா அமைப்பு மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான வேல்முருகன், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாவட்டச் செயலாளரும், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர், செய்தி உதவி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான டாக்டர். ராஜ்பாபு, அணை. பா.ஜ.க. இல. சேட்டு, மா.து.த. ரூபாவதி, மனோன்மணி, ஆர்.ஜே.பாஸ்கர் பிச்சாண்டி வி.எஸ்.சி.ப. வெங்கடேசன், சரவணகுமார், நந்தகுமார் அம்மன் சிவராமன், சத்துவச்சாரி ஜெய், கே.ஜி.குட்டி, சக்கரவர்த்தி, சுகன்யா, சுகுணா, ரஜினி, ராஜ்குமார், பா.ம.க. சவணன், ஜென்டா சரவணன், தீபக் நரேந்திரன், சூர்யா, சத்துவாச்சாரி ஜெகன், பாலாஜி, ரமேஷ் ஆட்டோ கார்த்தி, செந்தில், ராகவ கிருஷ்ணா, அருணாச்சலம், மணிகண்டன், சதீஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாழ்த்து தெரிவித்து இவ்விழாவை சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தசரதன் பேசியதாவது:- வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்ட மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் மற்றும் உலகம் போற்றும், இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு மகத்தான அனைத்து நல திட்டங்கள் குறித்து முழுமையாக மக்கள் புரிந்து கொண்டனர். பாஜகவை ஆதரித்து வேலூர் மாவட்ட மக்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் பாஜகவை தேர்ந்தெடுப்பார்கள், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றிப் பெற்று வேலூர் மாவட்டம் சார்பில் மூன்று பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சட்டசபைக்கு அனுப்புவார்கள் இதற்கு நான் இரவு பகல் பாராமல் அயராது பாடுபடுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தசரதன் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment