Sunday, 9 February 2025

தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்கள் மற்ற பெண்களிடத்திலே... லஞ்சம் கேட்பது பலரது மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது!

ஈரோடு மாவட்டம், நசியனூரைச் சேர்ந்த ஜெயசுதா என்பவர் புங்கம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரிடம் மஞ்சுளா என்பவர், புதிதாக வாங்கிய இடத்துக்கு தனது பெயரில் பட்டா மாறுதல் செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளார். அப்போது ரூ.2,500 லஞ்சம் கேட்டாராம் விஏஓ ஜெயசுதா.. இதனை கொடுக்க விரும்பாத மஞ்சுளா விஏஓவை கையும் களவுமாக சிக்க வைத்திருக்கிறார். 

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்ற பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர், காவலர்கள் என தனி காவல் நிலையத்துடன் செயல்படுகிறது.

அந்த மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் யார் லஞ்சம் கேட்டாலும், லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை முடித்து தருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் புகார் தெரிவிக்கலாம். அப்படி புகார் தெரிவித்தால், புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து விஏஓ, தாசில்தார், சர்வேயர், ஆர்டிஓ, சார் பதிவாளர், காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் என எந்த துறை அதிகாரிகளையும் ரசாயன பொடி கலப்படம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டை கொடுத்து அவர்கள் லஞ்சத்தை பெறும் கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள்.

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல் லஞ்சம் வாங்கி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராவதுடன், குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.

நிரூபிக்க முடியாவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குள்ளாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சிறை தண்டனை மாறுபடுகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் மட்டுமல்ல.. லஞ்சப்பணத்தில் கோடிகளில் சொத்து சேர்த்தது தெரியவந்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்வார்கள்.

இந்நிலையில் தற்போது ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் நசியனூரைச் சேர்ந்த 48 வயதாகும் ஜெயசுதா (வயது 48). இவர் சென்னிமலை அருகே உள்ள புங்கம்பாடியிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ-வாக பணிபுரிந்து வரும் ஜெயசுதா இவர் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பெருந்துறையைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 48) என்பவர், தான் புதிதாக வாங்கிய இடத்துக்கு தனது பெயரில் பட்டா மாறுதல் செய்யக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் புங்கம்பாடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதாவைச் சந்தித்தாராம். அப்போது அவரிடம் பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெயசுதா கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் லஞ்சம் பெறுவதற்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி நகரைச் சேர்ந்த பூபதி (வயது40) என்பவரும் ஜெயசுதாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுளா, இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மஞ்சுளாவிடம் கொடுத்தனர். அந்த பணத்தை புங்கம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதாவை சந்தித்து மஞ்சுளா கொடுத்தார். அப்போது பணத்தை ஜெயசுதா பெற்றுக்கொண்டதும், அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அந்த பெண் கிராம நிர்வாக அதிகாரியை கையும், களவுமாக பிடித்து பின்னர், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பூபதி என்ற நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருக்கம்பத்தூர் ஆஜிபுரா பகுதியில் தெருவின் மத்தியில் கரண்ட் கம்பம் வைத்து சிமெண்ட் சாலை போட்ட வட்டார வளர்ச்சி அதிமேதாவிகள், இங்கு குப்பைகளை குவித்து துர்நாற்றம்

அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாமல் தத்தளிக்கும் பொதுமக்கள்!  மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட...