தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து, வேலூர் மாவட்டம், ஓடுகத்தூர் முதல் நிலை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மற்றும் உத்திர காவிரி ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை வேலூர் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் க.ஞானசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் குமார், தலைவர் பா.சத்தியாவதி பாஸ்கரன், துணைத் தலைவர் பெ. ரேணுகாதேவி பெருமாள் ராஜா, மன்ற உறுப்பினர்கள் மற்றும் மேற்பார்வையாளர் மதன்குமார் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது உடனிருந்தனர்.
மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பேரூராட்சி செயல் அலுவலர் க.குமார் மற்றம் தூய்மைப் பணியாளர்கள், மேல் பார்வையாளர்கள் கொண்டு அபாய எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டதுடன், பெரியவர்கள் சிறுவர்கள், பெண்கள் யாவரும் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ குளிக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சிக்குட்பட்ட சாலை தெருக்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காமல் மழைநீர் செல்வதற்கான தூய்மை பணியாளர்களைக் கொண்டு பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment