Monday, 2 December 2024

ஒசூா் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கனரா வங்கி சி.எஸ்.ஆா். நிதி ரூ.13.33 லட்சத்தை வழங்கியது!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த்., இ.ஆ.ப, அவர்களிடம் தருமபுரி கனரா வங்கி மண்டல மேலாளா் கே.பி.ஆனந்த், ரூ.13.33 லட்சம் சி.எஸ்.ஆா். நிதிக்கான வரைவோலையை வழங்கினாா். இந்த நிதியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசனட்டி மாநகராட்சி தொடங்கப் பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்கு புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்ட சி.எஸ்.ஆா். நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கனரா வங்கியின் தருமபுரி மண்டல மேலாளா் வினீஷ்பாபு, ஒசூா் எஸ்.எம்.இ. கிளை முதன்மை மேலாளா் ஞானவேல், ஒசூா் கனரா வங்கி 2 ஆவது கிளை மேலாளா் தன்யா மோகன், மாநகராட்சி கணக்காளா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...