கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு., ஐ.ஏ.எஸ், அவர்களின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுரையின் பேரில் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதிகளில் ஒசூர் உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் கெலமங்கலம் உணவுப்பாதுகாப்பு அலுவலர் பிரகாஷ், தளி உ.பா.அலுவலர் சந்தோஷ் குமார், காவேரிபட்டினம் உ.பா.அலுவலர் அஸ்வினி ஆகியோர் கொண்ட குழுவினர். கெலமங்கலம் பஸ்நிலையம், மெயின் பஜார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும், உணவு விடுதிகள், பேக்கரிகள், பானிபூரி கடைகள், டீ கடைகள், பலசரக்கு கடைகள், மற்றும் மட்டன் சிக்கன் இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது கெலமங்கலம் பஜாரில் இயங்கிவரும் ஒரு ஒட்டலில் கெட்டுப்போன காய்கனிகள், இட்லி தோசை மாவு, இருப்பு வைத்திருந்ததும். உணவுப்பாதுகாப்பு உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரித்து சப்ளை செய்து வந்த அந்த உணவு விடுதியை அதிகாரிகள் மூடி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் சில ஒட்டல்கள், பேக்கரிகளிலிருந்து கெட்டுப்போன சுமார் 6 கிலோ சிக்கன், மற்றும் 2 கிலோ கெட்டுப்போன முட்டை, 4 கிலோ காலாவதியான ரொட்டி, கேக் உணவுப்பொருட்கள், 6 கிலோ அழுகிய காய்கனிகள் மற்றும் ஒட்டல்கள், கறிக்கடைகள் & பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் 56 துருப்பிடித்த இரும்புக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர். மேற்படி கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை இருப்பு வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த உணவு வணிகர்களுக்கு ரூ.12000/- அபராதம் விதித்து குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் உணவுப்பாதுகாப்பு உரிமம் இல்லாமலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நடத்திவரும் ஒட்டல், பேக்கரி , ரிஸார்ட்ஸ், சொகுசு விடுதிகள், கம்பெனி கேண்டீன்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உணவுப்பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்த ஆய்வின்போது கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment