Monday, 2 December 2024

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! யாரெல்லாம் பயன்பெறலாம்? 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருவது கண்டறியப்பட்டது. குடிசை இல்லாத தமிழ்நாடு இலக்கை அடையும் வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முதல் கட்டமாக ரூ 3500 கோடி செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. இதற்கான நிதியும ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு 3.50 லட்சம் ரூபாய் அரசு நிதி கொடுக்கும். இந்த மூன்றரை லட்சமும் ஒரே தவணையாக கொடுக்காமல் 4 தவணைகளாக கொடுக்கப்படும்.

இந்த பணம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சொந்தமாக பட்டா வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளை பெற குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடிக்கு கான்கிரீட் வீடு கட்ட வேண்டும்.

புதிய வீடுகள் அனைத்தும் சிமென்ட் மூலம் மட்டுமே கட்டப்பட வேண்டும். மண் சுவர், மண் சாந்து மூலம் கட்டப்படக் கூடாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாது. சொந்தமாக பணம் போட்டு கான்கிரீட் வீடு கட்டி இருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு பெற குடிசை வீடுகளில் வாழ்பவராக இருத்தல் அவசியமானதாகும். குடிசையில் ஒரு பகுதி கான்கிரீட், ஓடு, அல்லது ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெறவே முடியாது. கலைஞர் திட்டத்தில் வீடு கட்ட சிமென்ட், கம்பி வழங்கப்படும். ரூ 3.50 லட்சத்தில் ரூ 3.10 லட்சம் 4 தவணைகளாக கொடுக்கப்படும். மீதமுள்ள 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...