Sunday, 8 December 2024

நூறு கிராமங்களில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான எறிபந்தாட்ட போட்டி..!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் பாக்கம், கல்லப்பாடி, தாடிமான பல்லி, வளத்தூர் ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த பெண்களுக்கு பாக்கம் ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சத்திய சாய் சேவா நிறுவனம் சர்வம் பைனான்ஸ் இன்க்குளுசன் டிரஸ்ட் இணைந்து நூறு கிராமங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான எறிபந்தாட்ட போட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜான் சுகுமார் தலைமை வகித்து, திட்ட செயல்பாடுகள் குறித்து மக்கள் மற்றும் பெண்களுக்கு விளக்கமாக கூறினார். துணைத் தலைவர் வசுமதி மற்றும் முதன்மை மேலாளர் கிருபாகரன், திட்ட மேலாளர் சுரேஷ் குமார் வாழ்த்தி பேசினார். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார். போட்டியின் நடுவர்களாக  இளையராஜா கல்லபாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் செயல்பட்டனர் பெண்களுக்கான எறிபந்தாட்ட போட்டியில் கலந்துக் கொண்ட அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. கல்லபாடி அணி முதல் இடத்தையும் பாக்கம் அணி இரண்டாம் இடத்தைப் வெற்றி பெற்றனர். அணிக்கு கோப்பையும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்ட மேலாளர்கள் வெங்கடேசன் முதுநிலை ஒன்றிய மேலாளர் மகாலட்சுமி செய்திருந்தனர். இந்தநிகழ்வில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துக்  கொண்டனர்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...