Sunday, 8 December 2024

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கம்.. RTI தகவல்..!!

தமிழ்நாட்டில் மகளிர்க்காக திமுக அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் மகளிருக்காக சிறப்பு திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபா் வரை புதுப்பிக்கப்பட்டதில் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியாக குறைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திலிருந்து இதுவரை சுமார் 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 2022 முதல் வருடத்திற்கு சராசரியாக ஒரு மாதத்தில் 58,000 இறப்புகள் பதிவாகின்றன. இதன்படி, மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் இறந்தபின் அவர்களின் பெயர் அகற்றப்படும். மேலும், அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசுப் பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பயனாளிகளின் வங்கிக் கணக்குகள், நிலப்பதிவுகள், வருமான வரிக் கணக்குகள் மற்றும் வாகனப் பதிவுகள் உள்ளிட்ட பரிவா்த்தனைகள், சமூகப் பாதுகாப்பு ஆணையரால் மாதந்தோறும் எண்ம முறையில் கண்காணிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் இத்திட்டத்தின் கீழ் ரூ.1,140 கோடி வழங்கப்பட்டுள்ளது என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...