Friday, 6 December 2024

லத்தேரி ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ர லிங்கேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தாலுகா, லத்தேரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. 
லத்தேரியில் ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ர லிங்கேஸ்வரர் ஆலயம் 25 நாட்களில் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா 6ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வளர்பிறை பஞ்சமி திதி, திருவோண நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் நடந்தேறியது. இந்த ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ரலிங்கேஸ்வரர் ஸ்ரீ நந்தீஸ்வரர் சிலை பிரதிஷ்டை காலை 9 மணிக்கு மேல் மகர லக்கினத்தில் மஹா கும்பாபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இந்த ஸ்ரீ ராமநாதீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் லத்தேரி பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த மஹா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி முடித்தனர். இந்த கும்பாபிஷேகத்துக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சாரதி மேற்பார்வையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மஹா கும்பாபிஷேகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் ஸ்ரீ சிவ சித்தர் அம்மையார் கலந்து கொண்டு ருத்ர தாண்டவம் ஆடி பக்தர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...