Friday, 6 December 2024

ஏரிகுத்தியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு  ஒன்றிய அதிமுக சார்பில் ஏரிகுத்தி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் மாவட்ட அதிமுக பிரதிநிதியுமான ஜே. இன்பரசன் தலைமை தாங்கி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் ஒன்றியகுழு பெருந்தலைவரும், பேரணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளருமான. பொகளூர் டி. பிரபாகரன் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு. மாலை அணிவித்தார். ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டி. ஆரோன், சந்திரகாசி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். தேசிய மணி, பூபதி, கதிரேசன், சரவணன் நாயுடு,  கிளைச் செயலாளர்கள் குமரேசன், சங்கர், சுபாஷ் உள்பட மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

விடுதலைப்புலிகள் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியதா ஆதாரத்தை காட்டுங்கள் சீமான்!

பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...